search icon
என் மலர்tooltip icon

    துலாம்

    இந்தவார ராசிபலன்

    15.1.2024 முதல் 21.1.2024 வரை

    எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும் வாரம். இது வரை ஒரு தொழில் செய்து கொண்டு இருப்பவர்கள் இன்னொரு தொழில் செய்து எதிர்காலத்திற்கு சேமிக்க திட்டமிடலாம். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உற்சாகமாக எதையும் கற்றுக் கொள்வீர்கள். ஆன்மீகப் பெரியோரின் ஆசி கிட்டும். லாப அதிபதி சூரியன் சுக ஸ்தானத்தில் சொத்துக்களின் மதிப்பு கூடும். புதிய சொத்துக்கள் வாங்கும் பாக்கியம் உண்டாகும். கமிஷன் அடிப்படை யான தொழில் செய்பவர்களின் வருமானம் கூடும்.வராக்கடன்கள் வசூலாகும். எனினும் செலவு விசயத்தில் நிதானமாக இருக்க லேண்டும் பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமணத்திற்கு வரன் அமையும். மறுமண முயற்சி நிறைவேறும். பயணங்களால் பயன் கிடைக்கும்.பிள்ளைகளுக்கு கல்வியில் நாட்டமும், ஆர்வமும் அதிகரிக்கும். உயர்கல்வி முயற்சி வெற்றி தரும். 20.1.2024 அன்று காலை 8.52-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வேலைப்பளு மிகுதியாகும்.மன அமைதி குறையும். சிறுசிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். பேச்சைக் குறைப்பது நல்லது. பொங்கல் பண்டிகையன்று கூலித் தொழிலாளிகளின் தேவையறிந்து உதவவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×