என் மலர்

  துலாம் - வார பலன்கள்

  துலாம்

  இந்த வார ராசிப்பலன்

  8.8.2022 முதல் 14.8.2022 வரை

  அனுபவப்பூர்வமான அறிவுத்திறன் கூடும் வாரம். தன அதிபதி செவ்வாய் எட்டில் நின்று தன் வீட்டை பார்ப்பதால் வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களை கவர்ந்து லாபத்தைப் பெருக்குவார்கள். செய்யும் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். சிலருக்குப் புதுப் பதவிகளும் அதனால் வருவாய் பெருக்கமும் ஏற்படும். ராசிக்கு 7-ல் கெட்டவன் ராகு நிற்பதால் நண்பர்களால் திடீர் லாபங்கள் உண்டாகும்.

  கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் மீண்டும் கைகூடும். வராக்கடன்கள் வசூலாகும். 6-ல் குரு வக்ரம் பெறுவதால் செலவுகளும், விரயங்களும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் இருக்கும். வந்த பணம் அடுத்த நிமிடமே செலவாகலாம்.இந்த கால கட்டத்தில் ஜாமீன் கொடுப்பதையும், வாக்குறுதி கொடுப்பதையும் தவிர்த்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

  பெண்களுக்கு மாமியாருடன் ஏற்பட்ட கருத்து வேறு பாடு சீராகும். பூமி, வீடு மூலம் லாபம் ஏற்படும் பங்குச்சந்தைமற்றும் போட்டி பந்தயங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.சாமர்த்தி யமாக செயல்பட்டால் அனுகூலமான பலனை அடைய முடியும். சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் வழங்கவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  துலாம்

  இந்த வார ராசிப்பலன்

  1.8.2022 முதல் 7.8.2022 வரை

  திட்டங்களில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும் வாரம். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். லாபத்தை அதிகரிக்க புதிய விற்பனை யுக்திகளைக் கையாள்வீர்கள்.

  3,6-ம் அதிபதி குரு வக்ரம் பெறுவதால் கிணற்றில் போட்ட கல்லாக கிடந்த சில முயற்சிகள் முடிவிற்கு வரும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் மூலம் சொத்து தகராறு, கருத்து வேறுபாடு போன்றவற்றை சந்திக்க நேரும். பகைகளை வெல்லும் திறன் ஏற்படும். சிலருக்கு இந்த வாரம் வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம்.

  வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும். பணிபுரியும் பெண்களின் அறிவுத்திறன் கூடும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சுபகாரியச் செய்திகளால் சுபசெலவுகள் அதிகரிக்கும். ஓரிரு வாரங்களில் விரயங்கள் குறையும்.நல்ல ஆன்மீக குரு கிடைக்கப் பெற்று ஆன்மீக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும். வெள்ளிக்கிழமை சப்த மாதர்களை வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  துலாம்

  வார ராசி பலன்கள்

  25.7.2022 முதல் 31.7.2022 வரை

  செயல் திறன் மிகவும் சிறப்பானதாக இருக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும்.புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.

  வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு மறையும். சீரான பொருளாதார முன்னேற்றத்தால், மனதிற்குப் பிடித்தபடி மனை, வண்டி வாகனம் என அனைத்தும் அமையும். மாணவர்களின் உயர் கல்வி முயற்சி சித்திக்கும். கண் சிகிச்சை பலன் தரும். கலைத் துறையினர் பலர் வெளியூர், வெளிநாடு செல்வார்கள். சிலருக்கு அரசாங்க வேலை கிடைக்கும்.

  தந்தையின் ஆயுள், ஆரோக்கிய குறைபாடுசீராகும். தடைபட்ட பணி மாற்றம், ஊதிய உயர்வு, இடமாற்றம் இப்பொழுது உங்களை மகிழ்விக்கும். குடும்பத்துடன் பூர்வீகம் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைப்பேறு, புதிய தொழில் வாய்ப்புக்கள், அதிர்ஷ்ட வாய்ப்புகள், யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை கிடைக்கும்.பிரதோசத்தன்று சிவனுக்கு பஞ்சாமிர்த அபிசேகம் செய்யவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  துலாம்

  இந்த வார ராசிப்பலன்

  18-7-2022 முதல் 24-7-2022 வரை

  வாழ்க்கைத் தரம் உயரும் நேரம். ராசி அதிபதி சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் நிற்கிறார். பாக்கிய அதிபதி புதன் கர்ம ஸ்தானத்தில் லாப அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுகிறார். மிக அற்புதமான கிரக அமைப்பு என்பதால் பெற்றோர் வழியில் சில உதவிகள் கிடைத்து வாழ்க்கைத் தரம் உயரும்.

  வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். இளைய மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அரசு ஊழியர்களுக்குஅதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும்.சிலருக்குக் கவுரவப் பட்டங்கள் கிடைக்கும்.தாய் மாமனால் நன்மை ஏற்படும். ஆடி மாதம் என்பதால் சாலையோர பொருள்களின் விற்பனை சூடுபிடிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும்.

  ராசியில் கேது ராகு 7ல் ராகு செவ்வாயுடன் இணைந்து இருப்பதால் பெண்களுக்கு கோட்சார ரீதியான திருமணத் தடை நீடிக்கும். 22.7.2022 இரவு 11.01 முதல்25.7.2022 பகல் 11.32 மணி வரை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குழப்பமான மனநிலையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கும்.எந்த ஒரு இடத்திலும் தாமதமின்றி செயலை செய்து முடிக்க முயலவும். ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  துலாம்

  இந்த வார ராசிப்பலன்

  11.7.2022 முதல் 17.7.2022 வரை

  கனவுகள் யாவும் நிறைவேறும் வாரம். 3 ,6-ம் அதிபதி குரு ஆறில் ஆட்சி பலம் பெற்றதால்புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துவீர்கள்.திட்டமிட்ட பணிகள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்துகொள்வார்கள். பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

  4, 5-ம் அதிபதி சனி வக்ரகதியில் இருப்பதால் மாணவர்கள் தேவையில்லாத வீண் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். வாழ்க்கைத் துணை உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். அரசியல்வாதிகள் யோசித்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சாதகமாகவே அமையும்.

  கட்சியில் எவரிடமும் வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்ட வேண்டாம்.விரும்பிய வங்கி கடன் இந்த வாரத்தில் கிடைக்கும். உடலில் உள்ள சிறுசிறு உபாதைகளைக் கண்டு பயப்படாமல் மனம் தளராமல் வாழ்க்கையை எதிர்கொள்வது நல்லது.வெள்ளிக்கிழமை விளக்கு ஏற்றி மகா லட்சுமியை வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  துலாம்

  வார ராசி பலன்கள்

  4-7-2022 முதல் 10-7-2022 வரை

  மீண்டும், மீண்டும் வெற்றி வாய்ப்புகள் குவியும் வாரம். 6-ம் அதிபதி குரு 6ல் ஆட்சி பலம் பெறுவதால் யாரும் செய்யத் தயங்கும் செயல்களை துணிச்சலுடன் செய்து முடிக்கும் வல்லமை உண்டாகும். 1,8ம் அதிபதி சுக்ரன் 8ல் ஆட்சி பலம் பெறுவதால் விபரீத ராஜ யோகத்தால் உயில் சொத்து, பணம், பங்குச் சந்தை ஆதாயம் போன்ற மறைமுக வகையில் பொருளாதாரம் கிடைக்கும்.

  தாய் மாமா அல்லது தாய்வழி தாத்தா மூலம் நிதி உதவி கிடைக்கலாம்.தொழிலில் சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைக்கும். உயர் கல்வி முயற்சிக்கு சாதகமான சூழல் உண்டாகும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

  பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கு தகுந்த வருமானமும் அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. பெற்றோர்கள் வழியில் ஏற்பட்ட மன பாரம் குறையும்.வெவ்வேறுஊர்களில்பிரிந்துவாழ்ந்ததம்பதிகள் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிக ரமாக இல்லறம் நடத்தும்நல்ல நேரம். சிறு சிறு ஆரோக்கிய குறைபாடுகள் ேதான்றி மறையும். சிவவழிபாடு சிறப்பு.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  துலாம்

  வார ராசி பலன்கள்

  27-6-2022 முதல் 03-7-2022 வரை

  புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வாரம்.கடந்த காலத்தில் நிலவிய தடைகள் நீங்கும். பாக்கிய ஸ்தானத்தில் லாப ஸ்தான அதிபதி சூரியன் சஞ்சரிப்பதால் புதிய வேலைக்காக எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும்.

  தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சொந்த தொழில் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். சிலருக்கு உத்தியோக மாற்ற சிந்தனை அதிகரிக்கும். பெண்களுக்கு விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு கிடைக்கும். பெரிய பதவிகளும் உங்களுக்கு கிடைக்க கூடிய சாத்தியக்கூறும் உள்ளது. பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும்.

  தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும். மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும்குடிபுகும். 28.6.2022 காலை 5.32மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால்பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும். கோவில் யானைக்கு அருகம்புல், பழம், கரும்பு தரவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  துலாம்

  வார ராசி பலன்கள்

  இந்த வாரம் எப்படி 20-6-2022 முதல் 26-6-2022 வரை

  வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும். லாப ஸ்தான அதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பிறரை வசீகரிக்கும் ஆற்றல் உண்டாகும். கடன், வறுமை, கஷ்ட ஜீவனம், பூர்வீகத்தில் வாழ முடியாத நிலை, குடும்ப உறவு களிடம் மதிப்பு மரியாதை இன்மை, பிறரை அண்டி பிழைத்தல் போன்ற நிலை விலகும்.திட்டமிட்ட செயல்பாடுகள் மூலம் உங்கள் புகழ் உயரும்.

  புதிய வாய்ப்புகள் கதவை தட்டும். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் கூட்டாளிகளை இணைக்கும் முயற்சி பலிக்கும்.குடும்ப உறவுகளால் ஏற்பட்ட துயரங்கள் அகலும். வேலையாட்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் மீது பற்றும் பாசமும் அதிகரிக்கும்.கல்யாண கனவுகள் நனவாகும்.

  விரயத்திற்கு ஏற்ற வரவும் உண்டு.சம்பளபாக்கிகள் வசூலாகும். 25.6.2021 மாலை 5.02 மணிக்குசந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் பணப்பரி வர்த்தனையில் கவனம் தேவை.பணியாளர்களால் செலவு அல்லது சிறு பொருள் விரயம் ஏற்படலாம். பிரதோஷத்தன்று பிரதோஷ வேளையில் லட்சுமிநரசிம்மருக்குமல்லிகை மாலை சாற்றி வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  துலாம்

  வார ராசி பலன்கள்

  இந்த வாரம் எப்படி 13-6-2022 முதல் 19-6-2022 வரை

  காரியங்கள் கைகூடும் வாரம்.பல காலமாக சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்தவர்களுக்கு விசேசமான சம்பள உயர்வு உண்டு. உத்தியோகஸ்தர்கள் வேலைப் பளுவால் அலுவலகத்தில் அதிக நேரம் செலவிட நேரும். சிலர் உத்தியோகத்தில் இருந்து விடுபட்டு புதிய தொழில் துவங்கலாம். வியாபாரிகள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி புதிய முதலீடு செய்வது அவசியம்.

  6-ம்மிட குருவால் குறைந்த வட்டிக்கு நீண்ட காலத் தவணையில் கடன் கிடைக்கும். தன அதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தை பார்ப்பதால் சில விரயங்கள் ஏற்பட்டாலும்அது நல்ல எதிர்காலத்திற்கான அஸ்திவாரமாக அமையும். உள்நாட்டு பணம், வெளிநாட்டு பணம் என உங்கள் கையில் தாராளமாக பணம் புழங்கும்.

  விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடியாகும். பெண்களுக்கு உபரி நேரத்தில் தையல், அழகுகலை போன்ற தொழில் தொடர்பான கல்வி கற்கும் ஆர்வம் உண்டாகும். 6-ம்மிட செவ்வாயால் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடு சீராகும்.திருமண முயற்சி சாதகமாகும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  துலாம்

  வார ராசி பலன்கள்

  6.6.2022 முதல் 12.6.2022 வரை

  எதிர்மறை எண்ணங்கள் விலகி அழகான தோற்றப் பொழிவு உண்டாகும். ராசி அதிபதி சுக்ரன் ராசியை பார்ப்பதால் மனதில் ஏற்பட்ட இனம் புரியாத வேதனைகளும் பயங்களும் முற்றிலும் விலகும். தொழில் தொடர்பான அனைத்து திட்டங்களும் வெற்றியடையும். 3,6ம் அதிபதி குரு ஆட்சி பலம் பெற்று இருப்பதால் புதிய முதலீடுகள் குறித்த தீர்க்கமான திட்டமிடுதல் வேண்டும்.

  உடன் பணிபுரிபவர்களால் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றலாம். சிலர் வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம் படிப்பு போன்ற சுப செலவிற்காக கடன் வாங்கலாம். அல்லது ஒரு கடன் வாங்கி பழைய கடனை சமாளிக்கலாம். பல வழிகளில் வருமானம் வந்தாலும் உபரி பணம் கிடைக்காது.வியாபார பங்குதாரர்களுடன் வரவு, செலவு தொடர்பான மன பேதம் தோன்றும் வாய்ப்பு உள்ளது. முக்கியமான, பெரிய பணப் பரிவர்த்தனைகளுக்கான ஆவணங்களை பத்திரமாக பாதுகாக்கவும். ஜாமீன் போடுவதை தவிர்கவும். சிலருக்கு கொலஸ்ட்ரால் அதிகரித்து சிகிச்சை செய்ய நேரும்.

  உங்களின் வாழ்க்கைத் துணை முக்கியமான அனைத்து பணிகளுக்கும் உதவியாக இருப்பார்.பிரதோஷத்தன்று சிவனுக்கு பசுந் தயிர் அபிசேகம் செய்து வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  துலாம்

  வார ராசி பலன்கள்

  30.5.22 முதல் 5.6.22 வரை

  சந்தோசமான வாரம். 5-ம் அதிபதி சனி ஆட்சி பலம் பெற்று நிற்பதால் குல தெய்வ கோவில் மற்றும் ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். தாயுடன் ஏற்பட்ட ஈகோ பிரச்சினை முடிவிற்கு வரும். வியாபாரிகளின் உழைப்பு அதிக வருமானத்தை பெற்றுத்தரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு என விரும்பிய மாற்றங்களால் உள்ளம் குளிரும். பங்கு வர்த்தர்களின் வருமானம் கணிசமாக உயரும். திடீர் அதிர்ஷ்டத்திற்கு வாய்ப்புள்ளது.

  6-ல் குரு ஆட்சி பலத்துடன் இருப்பதால் கூடுதல் வருமானத்திற்கு ஆசைப்பட்டு புதிய நிதி நிறுவனங்களிடம் முதலீடு செய்ய வேண்டாம். 29.5.2022 பகல் 11.15 முதல் 31.5.2022 இரவு 11.30 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.

  பிரயாணங்களை ஒத்தி வைக்கவும். ராசியில் உள்ள கேதுவை செவ்வாய் 8ம் பார்வையாக பார்ப்பதால் கோபத்தால், தெளிவற்ற சிந்தனையால் நல்ல வாய்ப்புகளை தவற விடலாம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வெள்ளிக்கிழமை ஸ்ரீ சந்தான லட்சுமியை வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  துலாம்

  வார ராசிப்பலன் 23.5.22 - 29.5.22

  ராசி அதிபதி சுக்ரன் ராசியை பார்ப்பது நல்லது. இதனால் மனபலம், தேகபலம் கூடும். சுக்ரன் ராகுவுடன் 7-ல் இணைவதால் கணவன், மனைவி ஒற்றுமை தித்திக்கும். சிலருக்கு காதல் கலப்பு திருமணம் நடைபெறும்.

  தன ஸ்தானத்தை சூரியன் பார்ப்பதால் சிலர் கோபத்தால் நல்ல வாய்ப்புகளை தவற விட்டு பின் வருந்துவார்கள். தொழில் மற்றும் பொருள் வரவில் ஏற்ற இறக்கம் உண்டாகும். சிலர் பழைய வாகனத்தை புதுப்பிப்பார்கள்.

  சிலர் ஊர் மாற்றம் அல்லது வேலை மாற்றம் செய்யலாம். வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாயகம் வந்து செல்ல வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக சேமிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். 29.5.2022 காலை 11.15-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் முக்கிய பொறுப்புகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. இந்த வாரத்தில் நன்மையும், தீமையும் சேர்ந்தே நடைபெறும் என்பதால் அமாவாசையன்று சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு தானம் வழங்கினால் மேன்மை உண்டாகும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×