search icon
என் மலர்tooltip icon

  சிம்மம்

  தை மாத ராசிபலன்

  எந்த சூழ்நிலையிலும் கொள்கையை மாற்றிக்கொள்ளாத சிம்ம ராசி நேயர்களே!

  தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கப்போகின்றார். உங்கள் ராசியை குரு பகவான் பார்க்கின்றார். பலம் பெற்ற குருவின் பார்வை என்பதால் நல்ல பலன்கள் நடைபெற வேண்டும். ஆனால் கண்டகச் சனியின் ஆதிக்கம் இருக்கின்றது. எனவே இடையிடையே தாக்குதல்களும், தடைகளும் வரத்தான் செய்யும். அவற்றை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு என்பதால் கவலைப்பட வேண்டாம். ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை செலுத்துவது நல்லது.

  மே-குருவின் சஞ்சாரம்!

  மாதத் தொடக்கத்தில் மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். வக்ர நிவர்த்தியாகி பலம்பெற்று சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. 'குரு பார்க்கக் கோடி நன்மை' என்பதற்கேற்ப நினைத்த காரியங்கள் நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். தொழில் ரீதியாக வந்த இடையூறுகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர்.

  தனுசு-சுக்ரன்!

  ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம் தான். எனவே உடன்பிறப்பு கள் வழியில் ஒற்றுமை கூடும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். தொழில் ரீதியாகப் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். புனிதப் பயணங்களும் அதிகரிக்கும்.

  மகர-புதன்!

  ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் ராசிநாதன் சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கும் இந்த நேரம், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அரசு வழி ஆதரவு உண்டு. வேலைக்காக நீங்கள் எடுத்த முயற்சி பலன் தரும். தற்காலிகப்பணி ஒரு சிலருக்கு நிரந்தரப் பணியாக மாறலாம். பிறரை சார்ந்திருப்பவர்கள் தனித்து இயங்க எடுத்த முயற்சி வெற்றிபெறும்.

  மகர-செவ்வாய் சஞ்சாரம்!

  பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். அது செவ்வாய்க்கு உச்ச வீடாகும். உங்கள் ராசி நாதன் சூரியனோடு யோககாரகன் செவ்வாய் இணைவதால் இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். காரியங்கள் துரிதமாக நடைபெறும். 'கவலை' என்ற மூன்றெழுத்து உங்கள் அகராதியை விட்டு அகலப்போகின்றது. இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். இல்லம் தேடி சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றத்திற்கு வித்திடும் நேரமிது.

  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்குப் புதிய கூட்டாளிகளால் பொருளாதாரநிலை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். கலைஞர்களுக்கு திறமை பளிச்சிடும். மாணவ-மாணவி யர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். பெண்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

  ஜனவரி: 19, 20, 24, 25, 31, பிப்ரவரி: 1, 3, 4, 5.

  மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

  ×