search icon
என் மலர்tooltip icon

  சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்

  சிம்மம்

  கார்த்திகை மாத ராசிபலன்

  நினைத்ததை உடனே செய்ய விரும்பும் சிம்ம ராசி நேயர்களே!

  கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் தன லாபாதிபதியான புதனோடும், பாக்கியாதிபதியான செவ்வாயோடும் இணைந்து சஞ்சரிக்கின்றார். எனவே இந்த மாதம் யோகமான மாதம்தான். எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்துசேரும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் லாபம் கிடைக்கும். அஷ்டமத்தில் ராகு சஞ்சரித்தாலும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் காரியங்கள் துரிதமாக நடைபெறும்.

  வக்ர குருவின் ஆதிக்கம்

  மாதம் முழுவதுமே மேஷ ராசியில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. 8-க்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவது நன்மைதான் என்றாலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக புதன் விளங்குவதால் பூர்வீகச் சொத்துத் தகராறுகள் மீண்டும் தலைதூக்கும். பிரி வினையான சொத்துகள் திருப்தியாக இல்லையே என்று உடன்பிறப்புகள் பஞ்சாயத்தார்களை அணுகுவர்.

  உறவினர்களின் அனுசரிப்பு கொஞ்சம் குறையலாம். அதே நேரத்தில் அஷ்டமாதிபதி குரு என்பதால் எதிர்பாராத விதத்தில் மனநிறைவு தரக்கூடிய ஒருசில காரியங்களும் நடைபெறும். தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய வழிவகுத்துக் கொள்வீர்கள்.

  துலாம்-சுக்ரன்

  உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சகாய ஸ்தானாதிபதியான சுக்ரன் மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெற்றிருக்கின்றார். எனவே ஆரம்பத்தில் சில விஷயங்கள் அச்சுறுத்தலாகத் தோன்றலாம். சில காரியங்கள் முடியாமல் இழுபறி நிலையில் இருக்கலாம். ஆனால் கார்த்திகை 14-ம் தேதி சுக்ரன் துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகி வந்த பின்னால் வெற்றிகள் ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே மாதத்தின் பிற் பகுதியில் மகிழ்ச்சிக்குரிய தகவல் ஏராளமாக வரலாம். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். தொழில் வளர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

  தனுசு- புதன்

  உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். பூர்வ புண்ணியத்தின் பலனாக உங் களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து விதமான யோகங்களும் நன்மைகளும் கிடைக்கும் நேரமிது.

  குறிப்பாக பிள்ளைகளின் கல்யாண முயற்சிகள் கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். சேமிப்ப உயரும். செயல்பாடுகளில் இருந்த குறுக்கீடுகள் அகலும். அயல்நாட்டிலிருந்து அனுகூலமான தகவல் வரலாம்.

  சிம்மம்

  ஐப்பசி மாத ராசிபலன்

  18.10.2023 முதல் 16.11.2023 வரை

  நல்ல காரியங்கள் செய்வதை குறிக்கோளாகக் கொண்ட சிம்ம ராசி நேயர்களே!

  ஐப்பசி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது இம்மாதம் உங்கள் ராசிநாதன் சூரியன் நீச்சம் பெற்று குருவால் பார்க்கப்படுகின்றார். எனவே 'நீச்ச பங்க ராஜயோக' அடிப்படையில் கிரக பலன்கள் வந்து சேரும். எனவே எந்தக் காரியமும் முதல் முயற்சியில் வெற்றி அடையா விட்டாலும், அடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையும், ஆன்மிகப் பெரியவர்களின் அறிவுரையும் கைகொடுக்கும். பொருளாதாரத்தில் நெருக்கடி உண்டு.

  சனி வக்ர நிவர்த்தி!

  ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறுவதால் எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி மற்றவர்களிடம் விமர்சிக்க வேண்டாம். குடும்பத்தில் குழப்பங்கள் கூடுதலாக இருக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. கடன் சுமை கூடிக்கொண்டே போகின்றதே என்று கவலைப்படுவீர்கள். இட மாற்றங்களும், வீடு மாற்றங்களும் இனிமை தரலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைப்பது அரிது.

  குரு வக்ரம்!

  மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியில் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறும் பொழுது நன்மை தீமை இரண்டும் கலந்தே இருக்கும். குறிப்பாக அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவது நன்மை தான் என்றாலும், பஞ்சமாதிபதியாகவும் குரு விளங்குவதால் பிள்ளைகள் வழியில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே உங்கள் மேற்பார்வையிலேயே பிள்ளைகளை வைத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துத் தகராறுகள் மீண்டும் தலை தூக்கலாம். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமைய குருவை வழிபடுவது நல்லது.

  நீச்சம் பெறும் சுக்ரன்!

  ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். இது அவ்வளவு நல்லதல்ல. 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் நீச்சம் பெறும்பொழுது தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறும் சூழ்நிலை உண்டு. உடன்பிறப்புகளின் குணத்தில் மாற்றம் ஏற்படலாம். வழக்குகளில் திடீர் திருப்பங்கள் வரலாம்.

  விருச்சிக புதன்!

  ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். இக்காலம் ஒரு இனிய காலமாகும். தன லாபாதிபதி சுக ஸ்தானத்திற்கு வரும்பொழுது தனவரவு திருப்தி தரும். சுகங்களும், சந்தோஷங்களும் கூடும். குறுக்கீடு சக்திகள் அகலும். நெருக்கடி நிலை மாறும். நேசிப்பவர்களின் எண்ணிக்கை உயரும். வாகன யோகம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் பணிக்கு பாராட்டு கிடைக்கும்.

  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு லாபம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வரும். மாணவ-மாணவியர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். வருமானம் உயரும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 18, 19, 29, 30, நவம்பர் 9, 10, 13, 14.

  மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆனந்தா நீலம்.

  சிம்மம்

  புரட்டாசி மாத ராசிபலன்

  18-09-2023 முதல் 17-10-2023 வரை

  மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொல்லும் சிம்ம ராசி நேயர்களே!

  புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சூரியன், யோககாரகன் செவ்வாயோடு இணைந்து சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்ல, ராசியிலேயே தன-லாபாதிபதி புதனும் இருக்கிறார். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. தொழில் வளர்ச்சி திருப்தி தரும். தொடர்ந்து இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும் சந்தர்ப்பங்கள் எல்லாம் சாதகமாகவே அமையும் நேரம் இது.

  புதன் வக்ரம்

  புரட்டாசி 10-ந் தேதி கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். இது அவ்வளவு நல்லதல்ல. புதன் உச்சம் பெற்று வக்ரம் பெறுவதால் பொருளாதாரத்தில் தட்டுப்பாடு அதிகரிக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். மாமன், மைத்துனர் வழியில் மனக்கசப்புகள் ஏற்பட்டு அகலும். சேமிப்புக் கரைந்தாலும் அது சுபச்செலவாகவே மாறும். தொழில், உத்தியோகத்தில் திடீர் இடமாற்றம் ஏற்படலாம். உத்தியோக முயற்சிக்காக ஏற்பாடு செய்தவர்களுக்கு புதிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

  துலாம் - செவ்வாய்

  புரட்டாசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு 4, 9-க்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்தும் நேரம் இது. பூர்வீக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தந்தை வழியில் இருந்த உறவு பலப்படும். ஒரு சிலருக்கு பெற்றோர் வழியில் தொழிலுக்கான மூலதனம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி, சக ஊழியர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தொழிலில் பங்குதாரர்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

  துலாம் - புதன்

  புரட்டாசி 28-ந் தேதி துலாம் ராசிக்குப் புதன் வருகிறார். இக்காலம் உங்களுக்கு இனியகாலமாக அமையும். தன - லாபாதிபதி சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எந்தநேரத்தில் எதைச்செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும் நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நம்பிக்கைகள் நடைபெறும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு பணம் சரளமாக புரளும். உத்தி யோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ-மாணவிகளுக்கு எதிர் பார்த்த வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு மாதத் தொடக்கம் மகிழ்ச்சியாக அமையும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு விரயங்கள் கூடும். குடும்ப ஒற்றுமை குறையாமல் இருக்க விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

  செப்டம்பர்: 20, 21, 22, அக்டோபர்: 1, 2, 6, 7, 13, 14. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

  சிம்மம்

  தமிழ் மாத ராசிபலன்கள்

  18-08-2023 முதல் 17-09-2023 வரை

  வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட சிம்ம ராசி நேயர்களே!

  ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாத தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு சந்திரன், செவ்வாய், புதன், சுக்ரன் ஆகிய நான்கு கிரகங்களும் இணைந்து கூட்டுக் கிரக யோகத்தை உருவாக்குகிறார்கள். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம். எனவே, திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும்.

  தன்னம்பிக்கை துளிர்விடும். தனித்து இயங்குபவர்கள் பொருளாதார முன்னேற்றம் காண்பர். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். கடக - சுக்ரன் ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார்.

  உங்கள் ராசிக்கு 3, ௧௦ ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். தொழில் ஸ்தானாதிபதியான சுக்ரன், விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது தொழில் மாற்றம் மற்றும் உத்தியோக மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம். வாடகைக் கட்டிடத்தில் இயங்கிய தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

  பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு, புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட மாறுதல்கள் கிடைக்கும். ஒருசிலருக்கு ஊதிய உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து, வேறு இடத்தில் வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்படும்.

  கன்னி - செவ்வாய் ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், தன ஸ்தானத்திற்கு வரும் போது பொருளாதாரம் விருத்தியாகும். இடம் வாங்குதல், வீடு வாங்குதல், மனை கட்டிக் குடியேறும் அமைப்பு போன்றவற்றிற்கு அடித்தளம் அமையும் நேரம் இது.

  தன ஸ்தானத்தில் செவ்வாய் உலாவரும் போது, பூமி விற்பனையாலும், பங்குச் சந்தையாலும் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சகோதர வழி சச்சரவுகள் மாறி பாகப்பிரிவினைக்கு வழிபிறக்கும்.

  மகர - சனி சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மகர ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கிறார். வாக்கிய கணித ரீதியாக வரும் இந்த மாற்றம் உங்களுக்கு நன்மைகளைக் கொடுக்கும். கண்டகச் சனியில் இருந்து விடுபடுவதால் கடுமையாக முயற்சித்தும்இதுவரை நடைபெறாத காரியங்கள் துரிதமாக நடைபெறும்.

  இடம், பூமி சேர்க்கை, இல்லத்தில் சுப காரியங்கள், தொழில் முன்னேற்றங்கள், உத்தியோகத்தில் சம்பள உயர்வு போன்றவை திருப்திகரமாக அமையும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளும், செல்வாக்கும் அதிகரிக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு தடைப்பட்ட காரியங்களை தகுந்தவிதத்தில் செய்து முடிப்பீர்கள்.

  தன் வக்ர நிவர்த்தி சிம்மத்தில் சஞ்சரித்து வரும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்குத் தன - லாபாதிபதியான புதன் வக்ர நிவர்த்தியாவது யோகம்தான். பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைவீர்கள். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். வியாபாரப் போட்டிஅகலும். தொழில் வெற்றிநடைபோடும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் தானாக வந்துசேரும்.

  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொன்னான நேரம் இது. தொழில் செய்பவர்கள் விரும்பியபடியே லாபத்தை அடைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.

  மாணவ - மாணவிகள் மகத்தான பலனைப் பெறுவர். பெண்களுக்கு கொடுக்கல்- வாங்கல் சரளமாகும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 20, 21, 23, 24, செப்டம்பர்: 4, 5, 8, 9, 16, 17. மகிழ்ச்சி தரும்

  வண்ணம்:- வைலட்.

  சிம்மம்

  தமிழ் மாத ராசிப்பலன்

  17.7.23 முதல் 17.8.23 வரை

  சிம்மம்நம்பியவர்களுக்கு கைகொடுத்து உதவும் சிம்ம ராசி நேயர்களே!

  ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் விரய ஸ்தானத்தில் லாபாதிபதி புதனோடு இணைந்திருக்கிறார். எனவே தொழிலில் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்குமென்றாலும் விரயங்களும் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவற்றைச் செய்ய முன்வருவீர்கள். கண்டகச் சனியின் ஆதிக்கம் இருந்தாலும் அது வக்ர இயக்கத்தில் இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. விட்டுக் கொடுத்துச்செல்வதன் மூலம் குடும்ப ஒற்றுமை பலப்படும்.

  மேஷ - குரு சஞ்சாரம்

  நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு பகவான், உங்கள் ராசியைப் பார்ப்பது யோகம்தான். அதிலும் 5-ம் பார்வையாக பார்க்கிறார். 'ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்' என்பது ஜோதிட நியதி. எனவே பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். அருளா ளர்களின் ஆலோசனையால் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். உயர் அதிகாரிகளின் பழக்கத்தால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். 'ரண சிகிச்சை செய்தால்தான் நோய் குணமாகும்' என்று சொன்ன மருத்துவர்கள், இப்பொழுது சாதாரண சிகிச்சையிலேயே குணமாக்கி விடலாம் என்று சொல்வார்கள். தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.

  குருவின் பார்வை சகோதர மற்றும் சகாய ஸ்தானத்திலும், பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பதிகின்றது. எனவே வியாபாரம் வெற்றி நடை போடும். வீடு, இடம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் உங்களுக்கென்று தனி மரியாதை கிடைக்கும். கடமையைச் செவ்வனே செய்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் செய்வோர், தனியாகத் தொழில் தொடங்குவது பற்றி ஆலோசிப்பீர்கள்.

  சிம்ம - புதன்

  ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு தன -லாபாதிபதியான புதன், உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நேரம் மிகுந்த யோகமான நேரமாகும். வாய்ப்புகள் வாசல் தேடி வரும். வருமானம் உயரும். குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்களும் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. ஆடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

  பழைய பாக்கிகள் வசூலாகும். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம், இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இப்பொழுது விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வெளியில் வரலாமா? என்று சிந்திப்பர். பொதுவாக தொட்ட காரியங்களில் வெற்றி பெறும் நேரம் இது.

  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அவர்கள் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும். வியாபாரம், தொழில் புரிபவர்களுக்கு மாதக் கடைசியில் லாபம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு சகக் கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவ -மாணவிகளுக்கு எதிர்பார்த்த துறை அமையும். பெண்கள் சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்க நேரிடும். தடைகள் அகன்றோடும். மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் எண்ணங்கள் ஈடேறும்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

  ஜூலை: 17, 23, 24, 27, 28, ஆகஸ்டு: 8, 9, 13, 14.

  மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்

  சிம்மம்

  தமிழ் மாத ராசிப்பலன்

  சகலக் கலைகளிலும் வல்லவர்களாக விளங்கும் சிம்ம ராசி நேயர்களே!

  ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாத தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியை குரு பகவான் பார்க்கிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கு ஏற்ப நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் மாதம் இது. தொல்லை தந்தவர்கள் விலகுவர். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். கண்டகச்சனியின் ஆதிக்கம் இருப்பதால் இடையிடையே ஆரோக்கியத் தொல்லை ஏற்பட்டு நிவர்த்தியாகும்.

  மிதுன - புதன்

  ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், லாப ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பது யோகம்தான். அதுமட்டுமல்லாமல் சூரியனோடு புதன் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தையும் உருவாக்குகிறார். எனவே படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் பலன் கிடைக்கும். அரசாங்க உதவியை நாடுபவர்களுக்கு அது கைகூடும். வெளிநாட்டில் இருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்திலேயே பணி உயர்வும், சம்பள உயர்வும் ஏற்படும். சேமிப்பு உயர எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

  சிம்ம - செவ்வாய்

  ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அப்பொழுது குருவின் பார்வை செவ்வாய் மீது பதிகிறது. எனவே 'குரு மங்கல யோகம்' ஏற்படுகிறது. சுபச்செலவுஅதிகரிக்கும். எதிர்பாராத விதத்தில் உதவிகள் கிடைத்து தொழில் வளர்ச்சி கூடும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கையும் உண்டு. குருவின் பார்வை பதிந்த செவ்வாய், சனியைப் பார்ப்பதால் மருத்துவம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.

  சிம்ம - சுக்ரன்

  ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார். மேலும் குருவின் பார்வை, செவ்வாய் மற்றும் சுக்ரன் மீது பதிவதால் ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு சில முக்கியப் பொறுப்பு கிடைக்கும். மேல்மட்டத் தலைவர்கள் மிக நெருக்கமாக இருப்பார்கள். அவர்களின் உதவியோடு முன்னேற்றம் காண்பீர்கள்.

  கடக - புதன்

  ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், விரய ஸ்தானத்திற்கு வரும்போது கட்டுக்கடங்காத வகையில் செலவு ஏற்படும். பெற்றோரின் மணிவிழா, பிள்ளைகளின் மணவிழா, இடம், பூமி வாங்கும் அமைப்பு, வாகன மாற்றம் போன்றவற்றுக்காக செலவிட்டு, வீண்விரயத்தை சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தை சீராக்கிக்கொள்ள இயலும்.

  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஆதரவோடு மிகச்சிறந்த பொறுப்புகள் வரலாம். வியாபாரம், தொழில் செய்பவர்கள் புதிய கிளை திறக்கும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகப் பொறுப்புகள் கூடும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு வெற்றி வாகை சூடும் அமைப்பு உண்டாகும். பெண்களுக்கு மனநிறைவும், மகிழ்ச்சியும் ஏற்படும் நேரம் இது. பணிபுரியும் பெண்களுக்கு பணிச்சுமை கூடும். அதற்கேற்ப ஊதிய உயர்வு வந்து சேரும்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 18, 19, 26, 27, 30 ஜூலை: 1, 2, 11, 12, 16.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

  சிம்மம்

  தமிழ் மாத ராசிப்பலன்

  15.5.23 முதல் 15.6.23 வரை

  மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்து முடிக்கும் சிம்ம ராசி நேயர்களே!

  வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியைக் குரு பகவான் பார்க்கிறார். எனவே இம்மாதம் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறப்போகிறது. கண்டகச் சனியின் ஆதிக்கம் ஒருபுறம் இருந்தாலும், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் நடைபெறும். காரணம் குருவின் பார்வைதான். பஞ்சம அஷ்டமாதிபதியான குருவின் பார்வைக்கு பலன் அதிகம் உண்டு.

  ராகு-கேது சஞ்சாரம்

  பின்னோக்கி நகரும் கிரகங்களான ராகு-கேதுக்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல வழிகாட்டும். பாக்கிய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கிறார். அவர் குருவோடு இணைந்திருப்பதால் அனைத்து யோகங்களையும் வழங்குவார். அதே சமயம் 3-ல் சஞ்சரிக்கும் கேதுவையும் குரு பார்க்கிறார். குரு பார்வை காரணமாக கேது சஞ்சரிக்கும் ஸ்தானமும் புனிதமடைகிறது. எனவே இடையூறு சக்திகள் அகலும். சகோதரர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நிலுவையில் இருந்த வழக்குகளில் நீங்கள் நினைத்தது போல் தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத தன லாபங்கள் வந்து இதயத்தை மகிழ்விக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வுடன் கூடிய வேலை கிடைத்து நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைக்கப்போகிறது.

  கடக - சுக்ரன்

  வைகாசி 16-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள நீச்சம் பெற்ற செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். தொழில் ஸ்தானாதிபதியான சுக்ரன் விரய ஸ்தானத்திற்கு வருவதால், தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும். 'எவ்வளவு உழைத்தாலும் வியாபாரத்தில் அதற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே' என்று நினைத்து, புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். பொருளாதார தட்டுப்பாடு அகலும். என்றாலும் ஒருதொகை செலவழிந்த பின்னரே அடுத்த தொகை கைக்கு கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகள் மாறலாம். 'மக்கள் செல்வாக்கு அதிகரிக்க என்ன செய்யலாம்' என்று யோசிப்பீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

  ரிஷப - புதன்

  வைகாசி 18-ந் தேதி, ரிஷப ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு தன - லாபாதிபதியான புதன், சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். இது ஒரு பொற்காலமாகும். எதை எந்த நேரத்தில் செய்ய நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தொழில் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி பெறுவீர்கள்.

  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் எளிதில் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு லாபம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து கூடும். மாணவர்களின் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். துணிவும், தன்னம்பிக்கையும் உயரும். கணவன் - மனைவி உறவில் கனிவும், பாசமும் கூடும். பணிபுரியும் பெண்களுக்கு பரிசீலனையிலிருந்த பதவி உயர்வு கிடைக்கும்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 18, 19, 23, 24, 30, 31, ஜூன்: 3, 4, 5, 14, 15.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

  சிம்மம்

  தமிழ் மாத ராசிப்பலன்

  14.4.2023 முதல் 14.5.2023

  கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு வெற்றி காணும் சிம்ம ராசி நேயர்களே!

  சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். சனியின் சப்தம பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. கண்டகச் சனியின் ஆதிக்கமும், சூரியன் மற்றும் ராகு சேர்க்கையும் இருப்பதால் தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். கடன்சுமை கூடிக்கொண்டே செல்லும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குருவின் பார்வை உங்கள் ராசியில் பதியப்போவதால், மாதத் தொடக்கத்தில் முதல் வாரம் மகிழ்ச்சி குறைவாக இருந்தாலும், இரண்டாம் வாரத்தில் இருந்து இனிய பலன்கள் கிடைக்கும். சித்திரை 9-க்கு மேல் நல்ல பலன் நடைபெறப்போகிறது.

  சனியின் சஞ்சாரம்

  மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கின்றார். இதனை 'கண்டகச்சனி' என்று சொல்வர். வாக்கிய கணித ரீதியான இந்த பெயர்ச்சியின் விளைவாக உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. நெருங்கிப் பழகுபவர்களால் நிம்மதி குறையும். அதிக முயற்சியின் விளைவாகவே ஒருசில காரியங்கள் கைகூடும். உத்தியோகம், தொழிலில் நல்ல சந்தர்ப்பங்கள் வந்தாலும் விலகிச்செல்லும். குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாது. பணப்பரிமாற்றங்களில் கூடுதல் கவனம் தேவை. செவ்வாய்-சனி பார்வை இருப்பதால் மிகக் கவனத்தோடு செயல்படுவதே நல்லது.

  மேஷ - குரு

  சித்திரை 9-ந் தேதி மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகின்றார். அப்பொழுது அவரது பார்வை உங்கள் ராசியிலும், 3, 5 ஆகிய இடங்களிலும் பதிகின்றது. 'குரு பார்வையால் கோடி தோஷம் விலகும்' என்பார்கள். அந்த அடிப்படையில் அதன் பார்வை அற்புதமான பலன்களை வழங்கப்போகின்றது. ஆரோக்கியம் சீராகும். இனிய நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். மருத்துவச் செலவுகளாலும், மற்ற காரியங்களின் தடைகளாலும் மனவருத்தத்தில் இருந்த உங்களுக்கு, தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். சூரியனைக் கண்ட பளித்துளி விலகுவதுபோல, பட்ட துயரங்கள் விலகி ஓடும். சகோதர வர்க்கத்தினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகலும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். தினமும் ஒரு நல்ல செய்தி வந்துசேரும் நேரம் இது. இக்காலத்தில் யோகபலம் பெற்ற நாளில் அனுகூல தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நற்பலன்களை வழங்கும்.

  மிதுன - சுக்ரன்

  சித்திரை 20-ந் தேதி முதல் மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியான சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வரும்போது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்புவிழா நடத்திப் பார்ப்பீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை அமையும். அரசு வழியில் செய்த முயற்சியிலும் அனுகூலம் உண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.

  இம்மாதம் லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 20, 21, 25, 26, மே: 2, 3, 6, 7, 8, 9.

  மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

  சிம்மம்

  தமிழ் மாத ராசிப்பலன்

  15.3.2023 முதல் 13.4.23 வரை

  நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிக்கும் சிம்ம ராசி நேயர்களே!

  பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். எனவே உடல் நலத்தில் கவனம் தேவை. காரிய தாமதங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். கவலைக்குரிய தகவல்களும் வரலாம். சனியும், சூரியனைப் பார்ப்பதால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் உருவாகலாம். நிலைமை சீராக முறையான வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. அஷ்டமத்தில் சூரியனோடு புதனும், குருவும் இணைந்திருப்பதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும் என்றாலும் மனக்குழப்பம் அதிகரிக்கும்.

  இம்மாதம் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கிறார். இந்த நிகழ்வு பங்குனி 14-ந் தேதி வரை இருப்ப தால் மாதத் தொடக்கத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. மனதில் உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கையிருப்புகள் குறையலாம். கடமையில் தொய்வு ஏற்படும். 'நிலைமை இன்னும் சீராகவில்லையே, எப்பொழுதுதான் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்குமோ?, ஸ்தம்பித்து நின்ற தொழில் சிறப்பாக நடைபெறுமா?' என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றும். வியாபாரம் மந்த நிலையில் இருந்தாலும் ஓரளவு லாபம் கிடைக்கும். பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.

  மேஷ - புதன்

  பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிக்கு தன, லாபாதிபதியான புதன், 9-ம் இடத்திற்கு செல்கிறார். இக்காலம் உங்களுக்கு ஒரு ஏற்றமான காலமாகும். வருமானம் உயரும். வாழ்க்கைப் பாதை சீராகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பூமி வாங்குவது முதல் சாமி கும்பிடும் ஆன்மிகப் பயணம் வரை சந்தோஷமான தகவல் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட முன்வருவீர்கள்.

  ரிஷப - சுக்ரன்

  பங்குனி 24-ந் தேதி உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 10-ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கே செல்கிறார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டு. வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் யோகம் உண்டு. சகோதர வர்க்கத்தினர் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்குகள் சாதகமாக முடியும். வருமானப் பெருக்கத்திற்கும் வழி பிறக்கும். புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு.

  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முன்னேற்றப் பாதையில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். வியாபாரம், தொழில் நடத்துபவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வருமானம் திருப்தி தரும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு சுபவிரயங்கள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பணிபுரியும் இடத்தில் சகப் பணியாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.

  இம்மாதம் சூரிய பகவான் வழிபாடு சுகத்தை வழங்கும்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

  மார்ச்: 24, 25, 29, 30, ஏப்ரல்: 6, 7, 8, 10, 11.

  மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

  சிம்மம்

  தமிழ் மாத ராசிப்பலன்

  13.2.2023 முதல் 14.3.2023 வரை

  மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிக்கும் சிம்ம ராசி நேயர்களே!

  மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்தில் குரு மறைந்திருந்தாலும் அவரது பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே தேவைக்கேற்ப பணம் வந்துசேரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். ஒருசிலருக்கு இடமாற்றம், வீடு மாற்றம் வந்து சேரும். வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பார்க்கும் குருவைப் பலப்படுத்த, இக்காலத்தில் குரு வழிபாடு செய்தால் கூடுதல் நன்மை கிடைக்கும்.

  உச்ச சுக்ரன் சஞ்சாரம்

  மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், உச்சம் பெற்று குரு பகவானோடு சஞ்சரிப்பது யோகம்தான். திடீர் திடீரென பல நல்ல காரியங்கள் முடிவடையும். செல்வநிலை படிப்படியாக உயர்ந்து சேமிப்பை அதிகரிக்கச் செய்யும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் தானாக வரலாம். இதுவரை ஸ்தம்பித்து நின்ற தொழில், இனி வெற்றி நடைபோடும். பெண்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.

  கும்ப - புதன் சஞ்சாரம்

  மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன -லாபாதிபதியானவர் புதன். அவர் கும்பத்திற்கு சென்று உங்கள் ராசிநாதன் சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். அனைத்து விதமான நன்மைகளும் அடுத்தடுத்து வந்துசேரும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

  மீன - புதன் சஞ்சாரம்

  மாசி 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். தனாதிபதி நீச்சம் பெறும் போது, தட்டுப்பாடுகள் அதிகரிக்கும். 'பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படுகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்துவர். வெளிநாடு செல்லும் முயற்சியில் தாமதம் ஏற்படும். இளைய சகோதரத்தோடு இணக்கம் குறையும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

  மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

  மாசி 29-ந் தேதி, மேஷ ராசிக்கு சுக்ரன் செல்கிறார். பாக்கிய ஸ்தானத்திற்கு சுக்ரன் வரும் பொழுது தடைகளும், தாமதங்களும் அகலும். தனித்து இயங்கும் சூழ்நிலை அமையும். பெண் பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் தேடி வரலாம். வாழ்க்கைத் தேவைகள் படிப்படியாகப் பூர்த்தியாகும். வீடு கட்டும் முயற்சி அல்லது சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

  மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

  மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இக்காலத்தில் மிகுந்த கவனம் தேவை. விரயங்கள் அதிகரிக்கலாம். கடன் வாங்கிய இடத்தில் சில பிரச்சினைகள் உருவாகலாம். பூர்வீகச் சொத்துகளிலும் சிக்கல்கள் ஏற்படலாம். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் உருவாகும். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். அங்காரக வழிபாடு செய்வதன் மூலம் படிப்படியான முன்னேற்றங்கள் வந்துசேரும்.

  இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் அம்பிகையை வழிபடுவதன் மூலம் இன்பங்கள் வந்து சேரும்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

  பிப்ரவரி: 13, 14, 15, 25, 26, மார்ச்: 2, 3, 8, 9, 12, 13, 14.

  மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

  சிம்மம்

  தமிழ் மாத ராசிப்பலன்

  16.12.22 முதல் 14.1.23 வரை

  கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லும் சிம்ம ராசி நேயர்களே!

  மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சூரியன் மாதத் தொடக்கத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தன-லாபாதிபதியான புதனும், தொழில் மற்றும் சகாய ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரனும் இணைந்து சஞ்சரிக்கின்றனர். எனவே வளர்ச்சிப் பாதையில் இருந்த இடையூறு அகலும். தொழில் வளர்ச்சி உண்டு. வருமானம் திருப்தி தரும். வரன்கள் நல்ல முடிவிற்கு வரும்.

  புதன் வக்ர இயக்கம்

  உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி தனுசு ராசியில் வக்ரம் பெறுகிறார். தன-லாபாதிபதியான புதன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பொருளாதாரப் பற்றாக்குறை உயரும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்குவதால், சங்கிலித் தொடர் போல கடன் சுமை கூடும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். வாசல் தேடி வந்த ஒப்பந்தங்கள் கை நழுவிச் செல்லலாம். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். வெளிநாடு சென்றவர்கள், அங்கே உரிய வேலை கிடைக்காமல் சொந்த ஊர் திரும்பும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் முன்னேற்றத்தை அவர்களிடம் சொல்வதன் மூலம் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.

  மகர - சுக்ரன் சஞ்சாரம்

  உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். அவர் மகரத்தில் உள்ள சனியோடு இணைந்து சஞ்சரிக்கும் போது உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கடன்சுமையின் காரணமாக மூடிக்கிடந்த தொழிலை ஏற்று நடத்த முன்வருவீர்கள். நினைத்த இலக்கை அடைய வழிபிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

  புதன் வக்ர நிவர்த்தி

  மார்கழி 24-ந் தேதி, தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ர நிவர்த்தியாவதால் நல்ல பலன்கள் இல்லம் தேடிவரும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களைப் பாகப்பிரிவினை செய்யும் முயற்சி கைகூடும். புண்ணிய காரியங்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உருவாகும்.

  செவ்வாய் வக்ர நிவர்த்தி

  மார்கழி 29-ந் தேதி, ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். இது ஒரு பொற்காலமாகும். உங்கள் ராசிக்கு யோகாதிபதியாக விளங்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாவதால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். அன்றாட செயல்களில் இருந்த தாமதம் அகலும். பெற்றோர் வழி ஆதரவோடு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். உற்றார், உறவினர் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள். சொத்துக்களால் லாபம் உண்டு. எந்த காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்துச் செய்வது நன்மையைத் தரும்.

  செவ்வாய் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குவதால் பாக்கிய ஸ்தானம் பலப்படுகிறது. எனவே சகல வழிகளிலும் நன்மை கிடைக்கும். தடுமாற்றங்கள் அகலும். எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமோ அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாகவே வந்து சேரும்.

  இம்மாதம் ஞாயிறு தோறும் அனுமனை வழிபட்டால் ஆனந்தமான வாழ்க்கை அமையும்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 16, 17, 26, 27, ஜனவரி: 1, 2, 6, 7, 14. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

  சிம்மம்

  இந்த வார ராசிப்பலன்

  17.11.21 முதல் 15.12.21 வரை

  நாளும் ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்று நினைக்கும்சிம்ம ராசி நேயர்களே!

  கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அவரோடு கேதுவும் இணைந்திருக்கின்றார். குருவின் நேரடி பார்வை உங்கள் ராசியில் பதிவதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும்.

  செவ்வாய்-சனி பார்வைக் காலம்

  மாதத் தொடக்கத்தில் இருந்து கார்த்திகை மாதம் 20-ந் தேதி வரை செவ்வாய்-சனி பார்வை இருக்கின்றது. பூமிகாரகன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் இருப்பதால் `வாங்கிப் போட்ட இடத்தை விற்க முடியவில்லையே, கட்டிய கட்டிடத்திற்கு வாடகைக்கு குடிவர ஆள் வரவில்லையே' என்றெல்லாம் நினைத்தவர்களுக்கு நல்ல தகவல் இப்போது கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியே சிறுசிறு பிரச்சினைகள் வரலாம்.

  விருச்சிக புதனின் சஞ்சாரம்

  கார்த்திகை முதல் நாளே விருச்சிக ராசிக்குப் புதன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 11-க்கு அதிபதியானவர் புதன். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் சுகங்களும், சந்தோஷங்களும் வந்து சேரும். தொழில் வெற்றி நடை போடும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு பாராட்டும், புகழும் கூடும். அரசு வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு அதுவும் கைகூடும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறலாம்.

  தனுசு புதனின் சஞ்சாரம்

  கார்த்திகை மாதம் 18-ந் தேதி தனுசு ராசிக்குப் புதன் செல்கின்றார். அங்குள்ள சுக்ரனோடு சேர்ந்து புத-சுக்ர யோகத்தை உருவாக்குகின்றார். எனவே பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய தகவல் கிடைக்கலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை படிப்படியாக அகலும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். புத-சுக்ர யோகம் ஏற்படுவதால் சொத்துக்களால் ஆதாயமும், செல்வ நிலையில் உயர்வும் ஏற்படும்.

  மகர சுக்ரனின் சஞ்சாரம்

  கார்த்திகை 19-ந் தேதி மகர ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சகாய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன் 6-ல் சஞ்சரிக்கும் பொழுது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வும், இலாகா மாற்றங்களும் கிடைக்கலாம். பணி நிரந்தரம் பற்றிய நல்ல தகவல் வந்து சேரும்.

  விருச்சிக செவ்வாயின் சஞ்சாரம்

  கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாயாகும். அவர் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் எடுத்த முயற்சிகள் கைகூடும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். வாரிசுகளின் திருமணங்களை சிறப்பாக நடத்தி வைப்பீர்கள். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றம் தரும்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

  நவம்பர்: 17, 18, 23, 24, 30, டிசம்பர்: 1, 3, 4, 5, 14, 15

  மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

  ×