search icon
என் மலர்tooltip icon

    மிதுனம்

    இந்தவார ராசிபலன்

    8.1.2024 முதல் 14.1.2024 வரை

    முயற்சிகளில் வெற்றியடையும் வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு 7-ல் வெற்றி ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைவது புத ஆதித்திய யோகம். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சாரும். அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் சூரியனைச் சேரும். உங்களுடைய செயல்பாடு களால் குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கு வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் நிலவிய சங்கடங்கள் விலகும். சுபகரியங்கள் நடக்கும். உடன் பிறந்தவர்கள் அனைவரும் ஒற்றுமையாக பேசி முறையாக பாகப் பிரிவினைகளை முடிப்பீர்கள். பொதுக் காரியங்களில் ஆர்வம் உண்டாகும்.

    சிலருக்கு மறுமணம் நடக்கும். புதிய வீடு, வாகனம் வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. சுப பலன்கள் உண்டாகும். உடல் நலம் திருப்தி தரும். 11.1.2024 இரவு 11.05 முதல் 13.1.2024 இரவு 11.35 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர் விவகாரங்களில் தலையிடாமல் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மூன்றாம்பிறையன்று சந்திர தரிசனம் செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×