search icon
என் மலர்tooltip icon

    மிதுனம்

    இந்தவார ராசிபலன்

    11.12.2023 முதல் 17.12.2023 வரை

    முயற்சிகள் நிறைவேறும் வாரம். முயற்சி ஸ்தான அதிபதி சூரியன் 6-ம் அதிபதி செவ்வாயுடன் ராசிக்கு 6-ல் சேர்க்கை பெறுவதால் துணிச்சலுடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். முயற்சிகளால் சிறப்படைவீர்கள். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிரிகள் தாமாக விலகு வார்கள். தொழில் ஆர்வம் அதிகரிக்கும். வருமானத்தில் நிலவிய தடைகள் விலகும். கணவன், மனைவிக்குள் நிலவிய சங்கடங்கள் விலகும். சொத்துக்கள் வாங்க வீடு கட்ட எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் உங்கள் புகழ் பரவும். அரசியல் அரசாங்க ஆதரவு உண்டு. உத்தி யோகத்தில் மகழ்ச்சியான நிலை ஏற்படும்.

    படித்த வர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். பிள்ளைகளுக்கான சுப செலவு அதிகரிக்கும். பங்குச்சந்தை ஆர்வம் அதிகரிக்கும்.புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் விலகும். 15.12.2023 பகல் 1.45 முதல் 17.12.2023 மாலை 3.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்சினைகள் தோன்றினாலும் உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்து செயல்படுவது நல்லது. அமாவாசையன்று காவல் தெய்வங்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×