search icon
என் மலர்tooltip icon

    மிதுனம்

    இந்தவார ராசிபலன்

    26.11.2023 முதல் 3.12.2023 வரை

    அனுகூலமான பலன்கள் உண்டாகும் வாரம்.ராசி அதிபதி புதன் ராசிக்கு 7-ல் நின்று தன் வீட்டைத் தானே பார்ப்பதால் உள்ளுணர்வு மிகவும் சிறப்பாக இயங்கும். அதை மேலும் வலுப்படுத்த நல்ல சிந்தனை அவசியம். திறமைகளில் மெருகு கூடும். இளமை பொலிவு உண்டாகும்.உங்களின் செயல்பாடுகள் நல்ல வெற்றி தருவதாக அமையும். சீரான தொழில் வளர்ச்சியால் நம்பிக்கையும் தைரியமும் கூடும். வேலை தேடுபவர்களுக்கும், வேலை மாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கும் நல்ல வேலை அமையும். செவ்வாய் சனி சம்பந்தம் இருப்பதால் உடல் நலம் தொடர்பான அக்கறை தேவை.

    வாழ்க்கைத் துணையின் செயல்பாடுகள் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள், நல்ல சலுகைகளைப் பெறுவார்கள். விவசாயிகள் இடைத்தரகர்கள் ஒத்துழைப்பை எதிர்பாராமல் நேரடி விற்பனையில் ஈடுபடுவது நல்லது. வீடு கட்டத் தேவையான நிதி கிடைக்கும். கணவன், மனைவி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.புதன் கிழமை துளசி மாலை அணிவித்து மகா விஷ்ணுவை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×