search icon
என் மலர்tooltip icon

    கடகம்

    இந்தவார ராசிபலன்

    4.12.2023 முதல் 10.12.2023 வரை

    மகிழ்ச்சியான நிம்மதியான வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு சனி மற்றும் குருபார்வை பதிவதால் அறிவாற்றல் அதிகமாகும்.முன் கோபம் குறையும்.நெருக்கடியாக இருந்த குடும்ப பிரச்சினைகள் நீங்கும்.தொழிலில் லாபம் அதிகரிக்கும்.கிடைக்கும் லாபத்தை முறையான முதலீடுகளில் ஈடுபடுத்த வேண்டும்.அஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் சுய ஜாதக ரீதியான தசா புத்திக்கு ஏற்ப சுய தொழிலில் புதிய முதலீடுகளைக் செய்வது நல்லது.பிள்ளைகளின் திருமணம், குழந்தை பாக்கியம், உத்தியோக, தொழில் அனுக்கிரகம் மன நிம்மதியைத் தரும்.அரசு வழி ஆதாயம் உண்டு.

    பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கவுரவம் உயரும். கை,கால், மூட்டு வலியால் ஏற்பட்ட அவதியில் இருந்து விடுதலை கிடைக்கும்.கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மறுதிருமணத்திற்கு நல்ல வரன் அமையும். கந்தகுரு கவசம் கேட்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×