search icon
என் மலர்tooltip icon

    கும்பம்

    இந்தவார ராசிபலன்

    15.1.2024 முதல் 21.1.2024 வரை

    விரும்பிய மாற்றம் தேடி வரும் வாரம். 3,10-ம் அதிபதி செவ்வாயின் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் அனைத்து விதமான ஏற்றமும் மாற்றமும் தேடி வரும். உங்கள் வாக்கிற்கு மதிப்பும், மரியா தையும் உண்டாகும். பேச்சை தொழிலாக கொண்ட வர்களுக்கு மேன்மை உண்டாகும். பல வழிகளில் வருமானம் வந்து மனதை மகிழ்விக்கும். துக்கம், துயரம், சங்கடங்கள் விலகும். உங்கள் வாக்கு வன்மையால், பண பலத்தால் விரும்பியதை சாதித்துக் கொள்வீர்கள். தாய் வழி உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை செலுத்துவீர்கள். கணவன், மனைவி ஊடல் கூடலாக மாறும். ஆரோக்கிய குறைபாடு அகலும். பிள்ளைகளின் திருமணம், குழந்தை பாக்கியம், உத்தியோக, தொழில் அனுக்கிரகம் மன நிம்மதியைத் தரும். சிலருக்கு அத்தை அல்லது சித்தியின் மூலம் அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும்.சிலர் தவணை முறையில் விலை உயர்ந்த ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். கண் சார்ந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். புதிய முதலீடுகள், முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும். நிலம், வீடு, வாகனம் போன்ற சொத்துச் சேர்க்கை உண்டாகும். திட்ட மிட்ட வரவு செலவு அவசியம். குல, இஷ்ட தெய்வத்தை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×