search icon
என் மலர்tooltip icon

    கும்பம்

    இந்தவார ராசிபலன்

    18.12.2023 முதல் 24.12.2023 வரை

    வாழ்க்கைத் தரம் உயரும் நேரம். ஏப்ரல் 21 வரை ராசி அதிபதி சனியின் 3-ம் பார்வை மேஷ ராசியில் உள்ள 2,11-ம் அதிபதி குருவின் மேல் பதிவதால் பெற்றோர் வழியில் சில உதவிகள் கிடைத்து வாழ்க்கைத் தரம் உயரும். ஜென்மச் சனியால் ஏற்பட்ட அவமானங்கள் குறையும். வெற்றியின் திசையை நோக்கி பயணிக்க துவங்குவீர்கள். அடிப்படை வாழ்வாதாரத்திற்குப் போராடியவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். பொருளாதாரத்தில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சமாளிக்கும் சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். விருப்ப விவாகம் நடைபெறும்.

    ராசி அதிபதி சனியை 3,10-ம் அதிபதி செவ்வாய் பார்ப்பதால் நிலம் சம்பந்தமாக உங்களுக்கும் சகோதரருக்கும் கைகலப்பு ஏற்பட வாய்ப்புண்டு. சித்தப்பா உங்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பார். கொடுக்கல், வாங்கலில் சிறப்பான நிலை நீடிக்கும். பங்குதாரர்கள் ஆதரவால் தொழிலில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க முடியும். ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும். அரசின் நலத்திட்டங்களால் ஆதாயம் உண்டாகும். ஏகாத சியன்று இளநீர் அபிசேகம் செய்து மகாவிஷ்ணுவை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×