தொழில்நுட்பம்

ட்ருகாலரில் வாய்ஸ் கால் மேற்கொள்ளும் வசதி அறிமுகம்

Published On 2019-06-19 05:23 GMT   |   Update On 2019-06-19 05:23 GMT
ட்ரூகாலர் சேவையில் வாய்ஸ் கால் மேற்கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அப்டேட் படிப்படியாக வழங்கப்படுகிறது.



ட்ரூகாலர் சேவையில் வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோடோகால் வசதி கடந்த வாரம் சோதனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் மொபைல் டேட்டா அல்லது வைபை நெட்வொர்க் மூலம் பயனர்கள் நேரடியாக வாய்ஸ் கால் மேற்கொள்ளும் வசதியை ட்ரூகாலர் அனைவருக்கும் வழங்குகிறது.

இந்த சேவையை ட்ரூகாலர் வாய்ஸ் என அழைக்கப்படுகிறது. புதிய சேவையை பயன்படுத்த செயலியினுள் வாய்ஸ் கால் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதை க்ளிக் செய்து மொபைல் டேட்டா அல்லது வைபை நெட்வொர்க் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

ட்ரூகாலர் வாய்ஸ் சேவை அதிக தரத்தில் (HD), குறைந்த லேடென்சியில் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். சேவையை மிக எளிமையாக இயக்க வாய்ஸ் ஷார்ட்கட் வழங்கப்படுகிறது. இதில் இன்-ஆப் லொகேஷன்களான கால் லாக், எஸ்.எம்.எஸ். இன்பாக்ஸ், காண்டாக்ட் ப்ரோஃபைல் மற்றும் கால் ஸ்கிரீன் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கிறது.



கடந்த வாரம் இந்த அம்சம் ட்ரூகாலர் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என கூறப்பட்டது. தற்சமயம் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு தளத்தில் ட்ரூகாலர் செயலியை பயன்படுத்தும் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ட்ரூகாலர் வாய்ஸ் கால் வசதி ஜூன் 10 ஆம் தேதி முதல் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வாய்ஸ் கால் அம்சம் படிப்படியாக வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ட்ரூகாலர் செயலியை பயன்படுத்துவோர் ட்ரூகாலர் வாய்ஸ் ஷார்ட்கட்டை பார்க்க முடியும். ஒருவேளை இந்த அம்சம் கிடைக்காதவர்களுக்கு விரைவில் இது வழங்கப்படலாம்.

இந்த அம்சம் ட்ரூகாலர் பிரீமியம் அல்லது பிரீமியம் கோல்டு சந்தா வைத்திருப்போர் மட்டுமின்றி அனைவருக்கும் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு தளத்தில் வழங்கப்பட்டுள்ள வாய்ஸ் கால் வசதி விரைவில் ஐ.ஒ.எஸ். பதிப்பிற்கும் வழங்கப்படும் என ட்ரூகாலர் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News