தொழில்நுட்பம்

டியூ-டிராப் நாட்ச், 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் அறிமுகமாகும் ரியல்மி 3

Published On 2019-03-01 06:12 GMT   |   Update On 2019-03-01 06:12 GMT
ஒப்போவின் துணை பிராண்டான ரியல்மி இந்தியாவில் தனது ரியல்மி 3 ஸ்மார்ட்போனினை மார்ச் 4 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. #Realme3



ஒப்போவின் துணை பிராண்டு ரியல்மி தனது ரியல்மி 3 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் மார்ச் 4 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக அறிமுகமாகிறது. ரியல்மி 3 ஸ்மார்ட்போன் டியூ-டிராப் நாட்ச் வடிவமைப்பு, மீடியாடெக் ஹீலியோ P70 மற்றும் 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. மார்ச் 4 இல் புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதை ரியல்மி ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்மார்ட்போனின் டீசர்களை அந்நிறுவனம் தனது வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தது. அதன்படி ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் டூயல் பிரைமரி கேமரா செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கிறது. ரியல்மியின் முந்தைய ஸ்மார்ட்போன்களில் டூயல் கேமரா செட்டப் கிடைமட்டமாக பொருத்தப்பட்டிருந்தது.



ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் டைமண்ட் கட் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ரியல்மி 1 மற்றும் ரியல்மி 2 மாடல்களிலும் டைமண்ட் கட் வடிவமைப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஸ்மார்ட்போனுடன் கவர்ச்சிகரமான கேஸ் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஏற்கனவே ரியல்மி வெளியிட்டிருந்த ஸ்மார்ட்போனின் அழைப்பிதழில் “Power Your Style” எனும் டேக்லைன் இடம்பெற்றிருக்கிறது. முன்னதாக ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், ஏ.ஐ. என்ஜின், ஜி.பி.யு. அக்செல்லரேஷன் மற்றும் கேமிங் மோட் உள்ளிட்டவை வழங்கப்படும் என ரியல்மி பிராண்டு தலைமை செயல் அதிகாரி உறுதிப்படுத்தி இருந்தார்.
Tags:    

Similar News