தொழில்நுட்பம்
புகைப்படம் நன்றி: winfuture

இணையத்தில் லீக் ஆன அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2

Published On 2018-12-02 05:57 GMT   |   Update On 2018-12-02 05:57 GMT
அசுஸ் நிறுவனத்தின் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது. #ASUS #asuszenfonemaxprom2



அசுஸ் நிறுவனம் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலை உருவாக்கி வருவது ஏற்கனவே உறுதியாகி இருக்கிறது. புதிய சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 மாடலில் முந்தைய ஸ்மார்ட்போனினை போன்றே பெரிய பேட்டரி, மேம்படுத்தப்பட்ட ஹார்டுவேர் மற்றும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனில் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் வழங்கப்படுகிறது. 


புகைப்படம் நன்றி: winfuture

வழக்கமான சென்ஃபோன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனில் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் வழங்கப்படுகிறது. இரண்டு வேரியன்ட்களிலும் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 நாட்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மற்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனில் 4 ஜி.பி. ரேம் 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி என இரு வேரியன்ட்களிலும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. ப்ரோ வேரியன்ட் 6 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


புகைப்படம் நன்றி: winfuture

சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனில் 12 எம்.பி. சோனி IMX486 சென்சார் கொண்ட பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. சென்ஃபோன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.

அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் இது முழுமையான கிளாஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

புதிய அசுஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் டிசம்பர் 11ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #ASUS #asuszenfonemaxprom2
Tags:    

Similar News