தொழில்நுட்பம்

தினமும் 4.5 ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை

Published On 2018-03-03 10:38 GMT   |   Update On 2018-03-03 10:38 GMT
வோடபோன் நிறுவனத்தின் புதிய சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் இதர சேவைகளை வழங்குகிறது.
புதுடெல்லி:

ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.549 மற்றும் ரூ.799 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் புதிய சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

புதிய சலுகைகளில் அன்லிமி்ட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வோடபோனின் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு தினசரி 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வோடபோன் ரூ.549 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 98 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3.5 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் வழங்கப்படும் புதிய சலுகையின் பலன்கள் சில வட்டாரங்களில் மாறலாம். தினசரி டேட்டா மட்டுமின்றி அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



வோடபோன் ரூ.799 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 126 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 4.5 ஜிபி பயன்படுத்த முடியும். தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் வழங்கப்படும் புதிய சலுகையின் பலன்கள் சில வட்டாரங்களில் மாறலாம். தினசரி டேட்டா மட்டுமின்றி அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

வோடபோன் அறிவித்து இருக்கும் புதிய சலுகைகள் ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் ரூ.509 மற்றும் ரூ.799 சலுகைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளில் முறையே தினமும் 4 ஜிபி மற்றும் 5 ஜிபி டேட்டாவும், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இரண்டு ஜியோ சலுகைகளின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
Tags:    

Similar News