தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தற்கொலைகளை தவிர்க்க பேஸ்புக் முடிவு

Published On 2017-03-02 05:52 GMT   |   Update On 2017-03-02 05:52 GMT
உலகின் முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் அதன் வாடிக்கையாளர்களை தற்கொலை செய்யாமல் பார்த்துக் கொள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:

பேஸ்புக் சமூக வலைத்தள வாடிக்கையாளர்கள் தற்கொலை செய்வதை தவிர்க்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த பேஸ்புக் முடிவு செய்துள்ளது. இதற்கென புதிய அப்டேட்களை பேஸ்புக்கில் வழங்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பேஸ்புக்கில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தற்கொலை தடுப்பு டூல்களை (suicide prevention tools) பேஸ்புக் போஸ்ட், லைவ்-ஸ்ட்ரீமிங் அம்சம், பேஸ்புக் லைவ் மற்றும் மெசேஞ்சர் சேவைகளில் புகுத்த இருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இதற்கென செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும் என அந்நிறுவனத்தின் இணையபக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் 14 வயதுடைய குழந்தை ஒன்று ஜனவரி மாதம் தற்கொலை செய்வதை பேஸ்புக் நேரலை செய்தது. பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீமிங்கில் ஆபாசமான தரவுகளை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவினை பேஸ்புக் பயன்படுத்தி வருகிறது. 

இந்நிலையில் அப்டேட் செய்யப்பட்டுள்ள புதிய டூல்களை கொண்ட பேஸ்புக் லைவ் வீடியோக்களை பார்ப்பவர்கள் அதனை பதிவு செய்வோரை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியும், அதனை பேஸ்புக்கிற்கு ரிப்போர்ட் செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News