தொழில்நுட்பம்

சாம்சங் கேலக்ஸி S8: வெளியீட்டு தேதி மற்றும் விலை கசிந்தது

Published On 2017-02-04 21:48 GMT   |   Update On 2017-02-04 21:48 GMT
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்தது. இந்நிலையில் S8 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விலை கசிந்துள்ளது.
சியோல்:

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான கேலக்ஸி S8 அவ்வப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் இதன் வெளியீடு சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவிலேயே எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு தாமதமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் 128ஜிபி இன்டெர்னல் மெமரியும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. இவற்றின் விலை 64 ஜிபி மெமரி கொண்ட மாடல் 885 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.59,000 மற்றும் 128 ஜிபி மாடல் 943 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.63,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.

இரு மாடல்களின் விற்பனையும் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் வழக்கமான 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வசதி மற்றும் பல்வேறு இதர அக்சஸரீகள் வழங்கப்படும் என்றும் இவற்றை கொண்டு சிறிய ஆண்ட்ராய்டு கணினியாக மாற்றும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் புதுவித சாம்சங் கியர் விர்ச்சுல் ரியாலிட்டி ஹெட்செட் மற்றும் கியர் 360 கேமரா உள்ளிட்டவையும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகின்றது.

Similar News