தொழில்நுட்பம்

சாலை பாதுகாப்புகளை சீர் செய்ய இரண்டு செயலிகள்: மத்திய அரசு திட்டம்

Published On 2017-01-07 13:42 GMT   |   Update On 2017-01-07 14:02 GMT
இந்தியாவில் சாலை பாதுகாப்பு வசதியை மேம்படுத்த உதவும் நோக்கில் இரண்டு புதிய செயலிகளை அறிமுகம் செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
புது டெல்லி:

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் எம்-பரிவாகன் (m-Parivahan) மற்றும் இ-செல்லான் (e-challan) என்ற பெயரில் இரண்டு செயலிகளை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த செயலிகள் இந்தியாவில் சாலை போக்குவரத்து பாதுகாப்புகளை உறுதி செய்வதோடு பொது மக்களுக்கு சேவைகளை எளிதாக்கும்.

எம்-பரிவாகன் செயலியானது பொது மக்களுக்கு பயன் தரும் செயலி ஆகும். இதை கொண்டு வாகனம் மற்றும் ஓட்டுநரின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முடியும்.

இ-செல்லான் என்பது அமாலக்க செயலி ஆகும். இந்த செயலியை போக்குவரத்து காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் பயன்படுத்துவர். 'சாலை போக்குவரத்தில் பாதுகாப்பை மேம்படுத்தவும், பொது மக்களுக்கு சேவைகளை எளிமையாக்கும் இரண்டு செயலிகளை மத்திய அரசு வெளியிட திட்டமிட்டுள்ளது', என சாலை போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இரண்டு செயலிகளின் மூலம் சாலை விபத்துகள் மற்றும் சாலை விதிமுறை மீறல் சார்ந்த பிரச்சனைகளை பொது மக்களால் தெரிவிக்க முடியும். இந்த செயலிகளின் மூலம் சாலை பாதுகாப்பினை பலப்படுத்த முடியும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இரண்டு செயலிகளும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த செயலியில் விதிமுறைகளை மீறுபவரின் ஓட்டுநர் உரிம எண்ணைப் பதிவு செய்தால், தவறு செய்தவரின் முழு தகவல்களும் செயலியில் பார்க்க முடியும். இதைக் கொண்டு குறிப்பிட்ட நபர் எந்த விதிமுறைகளை மீறினார் என்பதை பதிவு செய்து அதற்கான ரசீதுகள் முறையாக வழங்கப்படும்.

Similar News