தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போன் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்வது எப்படி?

Published On 2017-01-27 15:48 GMT   |   Update On 2017-01-27 15:48 GMT
ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் இல்லாத ஸ்மார்ட்போன்களையும் வேகமாக சார்ஜ் செய்ய முடியும். இங்கு உங்களின் ஸ்மார்ட்போன்களை வேகமாக சார்ஜ் செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.
புதுடெல்லி:

ஸ்மார்ட்போன்களில் அத்தியாவசியமான ஒன்றாக அதன் பேட்டரி இருக்கிறது. பேட்டரி இல்லாமல் ஸ்மார்ட்போன்களை இயக்க முடியாது என்ற நிலையில் அதன் பேக்கப் நேரம் இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு பிரச்சனையாக உள்ளது. இன்றைய ஸ்மார்ட்போன்களில் பேட்டரி பேக்கப் நேரம் போதாமல் பலரும் பவர் பேங்க் போன்ற கூடுதல் கையடக்க சார்ஜர் சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். 
 
ஸ்மார்ட்போன் பேட்டரி பேக்கப் போன்றே அதனை சார்ஜ் செய்வதும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது. எந்நேரமும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி விட்டு அவற்றை சார்ஜரில் போடவே பலருக்கும் நேரம் கிடைப்பதில்லை. இன்று வெளியாகும் சில ஸ்மார்ட்போன்களில் வேகமாக சார்ஜ் செய்யும் வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றது என்றாலும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இந்த வசதி கிடையாது.

இங்கு உங்களின் ஸ்மார்ட்போன்களை வேகமாக சார்ஜ் செய்ய சில எளிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்..

சார்ஜரை மட்டும் பயன்படுத்த வேண்டும்:


ஸ்மார்ட்போன்களை எப்போதும் அதனுடன் வழங்கப்பட்ட சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்ய வேண்டும். வீடு அல்லது அலுவலகம் போன்ற இடங்களில் கணினி இருக்கிறது என்பதற்காக கணினியில் யுஎஸ்பி கொண்டு சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். யுஎஸ்பி கொண்டு சார்ஜ் செய்யும் போது சார்ஜ் ஆக வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்து கொள்ளும். ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ் செய்ய சாதாரண சார்ஜரை மட்டும் பயன்படுத்தினால் வேகமாக சார்ஜ் செய்யலாம்.    

ஏர்பிளேன் மோடினை பயன்படுத்தலாம்:

ஸ்மார்ட்போனினை எத்தனை நிமிடங்கள் சார்ஜ் செய்தாலும் அதனினை ஏர்பிளேன் மோடில் (Airplane Mode) வைத்து சார்ஜ் செய்தால் சீக்கிரம் சார்ஜ் செய்திட முடியும். ஏர்பிளேன் மோடில் இருக்கும் போது ஸ்மார்ட்போனில் இணையம், மற்றும் நெட்வொர்க் சிக்னல் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டை நிறுத்தி போனின் இயக்கத்தை குறைக்கும். இதனால் ஸ்மார்ட்போனில் வேகமாக சார்ஜ் ஆகிவிடும். ஏர்பிளேன் மோடில் இருக்கும் போது உங்களுக்கு எவ்வித அழைப்பும், குறுந்தகவல்களும் வராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

தேவையற்ற அம்சங்களை நிறுத்தி வைக்க வேண்டும்:

ஸ்மார்ட்போனில் வை-பை, ப்ளூடூத், என்எஃப்சி, மொபைல் டேட்டா உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை ஆஃப் செய்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போதும் சார்ஜ் சீக்கிரம் நிரப்பப்படும். ஸ்மார்ட்போனில் தேவையற்ற அம்சங்களை ஆஃப் செய்து வைப்பதன் மூலம் சார்ஜிங் வழக்கத்தை விட வேகமாக இருக்கும்.

Similar News