தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டில் நீங்கள் இருக்குமிடத்தின் முகவரியை பகிர்ந்து கொள்வது எப்படி?

Published On 2017-01-21 15:55 GMT   |   Update On 2017-01-21 15:55 GMT
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் நீங்கள் இருக்கும் இடத்தின் முகவரியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:

புது இடங்களுக்கு சென்றாலோ அல்லது வெளியூர் பயணங்களிலோ நீங்கள் இருக்குமிடத்தை மற்றவர்களுக்கு விளக்கமளிப்பது சற்றே கடினமாக இருக்கும். இதோடு புரிய வைப்பதற்குள் மிக எளிமையாக பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு செய்ய ஸ்மார்ட்போன்களில் பல சேவைகள் இருக்கின்றன. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் நீங்கள் இருக்குமிடத்தை பகிர்ந்து கொள்வது எப்படி என்பதை பற்றி இங்கு பார்ப்போம். 

வாட்ஸ்அப் செயலி:

உலகின் முக்கிய குறுந்தகவல் செயலியாக இருக்கும் வாட்ஸ்அப்பில் நீங்கள் இருக்கும் இடத்தை பகிர்ந்து கொள்ள வசதி வழங்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த சாட் பாக்ஸ்-ல் இருக்கும் அட்டாச்மென்ட் பட்டனை கிளிக் செய்து நீங்கள் இருக்கும் இடத்தின் முகவரியை பகிர்ந்து கொள்ளலாம். 

ஃபேஸ்புக் மெசேஞ்சர்:

குறுந்தகவல் அனுப்பும் போது மெசேஞ்ச் பாக்ஸ்-ல் GPS லொகேஷன் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இதை கிளிக் செய்ய வேண்டும். இங்கு லொகேஷனை ஆன் செய்ய அனுமதிக்க வேண்டும். இதன் பின் நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுடன் உங்களது இருக்குமிடத்தின் முகவரியும் அனுப்பப்பட்டு விடும். இனி உங்களது குறுந்தகவலை பார்ப்பவர் "view map" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து இருக்குமிடத்தை அறிந்து கொள்ள முடியும். 

கூகுள் ஹேங்அவுட்ஸ்:

வாட்ஸ்அப் செயலியை போன்றே ஹேங்அவுட்ஸ் செயலியிலும் அட்டாச் பட்டனை கிளிக் செய்து லொகேஷன் பட்டனை கிளிக் செய்து இருக்குமிடத்தின் முகவரியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.  

மெசேஞ்சர் (எஸ்எம்எஸ்):

ஸ்டாக் ஆண்ட்ராய்டு மெசேஜிங் சேவையிலும் இருக்குமிடத்தை பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த மெசேஞ்சரில் இருக்கும் அட்டாச்மென்ட் பட்டனை கிளிக் செய்து GPS பட்டனை கிளிக் செய்து இருக்குமிடத்தை பகிர்ந்து கொள்ளலாம். 

கூகுள் மேப்ஸ்:

தெரியாத முகவரியை தேட பயன்படுத்தும் கூகுள் மேப்ஸ் செயலியை கொண்டே நீங்கள் இருக்குமிடத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இதற்கு நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய இடத்தை மேப்ஸ்-ல் அழுத்தி பிடித்து பின் திரையில் தெரியும் சிவப்பு நிற 'pin' ஐகான் மூலம் முகவரியை பதிவு செய்யும் ஆப்ஷன் அல்லது பகிர்ந்து கொள்ளும் ஆப்ஷன் காணப்படும். இங்கு 'share' என்ற ஆப்ஷனினை கிளிக் செய்து இருக்குமிடத்தின் முகவரியை மற்றவர்களுக்கு அனுப்பலாம். 

Similar News