தொழில்நுட்பம்

யுஎஸ்பி பிளாஷ் டிரைவ்களுக்கு பாஸ்வேர்டு செட் செய்வது எப்படி?

Published On 2017-01-11 10:54 GMT   |   Update On 2017-01-11 10:55 GMT
யுஎஸ்பி பிளாஷ் டிரைவ் அல்லது பென் டிரைவ்களுக்கு பாஸ்வேர்டு செட் செய்யும் எளிய வழிமுறைகளை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
புதுடெல்லி:

இன்று பெரும்பாலானோர் தங்களின் தரவுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், தகவல்களை எளிமையாக பரிமாற்றம் செய்யவும் யுஎஸ்பி பிளாஷ் டிரைவ்களை பயன்படுத்தி வருகின்றனர். மிகவும் சிறியதாக இருக்கும் பிளாஷ் டிரைவ்கள் காணாமல் போகும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.  

இதுபோல் காணால் போகும் பட்சத்தில் யுஎஸ்பி டிரைவுடன் சேர்த்து அதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள முக்கிய தகவல்களையும் இழக்க நேரிடும். இதனால் யுஎஸ்பி டிரைவ்களை பாதுகாப்பது முக்கியமானதாகிறது. உங்களின் யுஎஸ்பி டிரைவ்களை பாஸ்வேர்டு மூலம் பாதுகாப்பது எப்படி என்பதை இங்கு பார்ப்போம். 

விராக்ரிப்ட் (VeraCrypt):

விராக்ரிப்ட், என்க்ரிப்ஷன் செய்ய சக்திவாய்ந்த மென்பொருளான ட்ரூக்ரிப்ட் (TrueCrypt) சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ள மென்பொருள் ஆகும். ஹார்டு டிரைவ்களை என்க்ரிப்ட் செய்யும் மென்பொருள் என்றாலும் இது பிளாஷ் டிரைவ்களுக்கும் நன்கு வேலை செய்யும். 

இந்த மென்பொருள் உங்களது தகவல்களை பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கிறது. இத்துடன் என்க்ரிப்ட் செய்யப்பட்ட தகவல்களை விராக்ரிப்ட் பயன்படுத்தி மட்டுமே இயக்க முடியும். 

டிஸ்க்ரிப்டர் (DiskCryptor):

ஹார்டு டிஸ்க்களை என்க்ரிப்ட் செய்ய உதவும் மென்பொருளான டிஸ்க்ரிப்டர் யுஎஸ்பி பிளாஷ் டிரைவ்களையும் பாதுகாக்கிறது. விராக்ரிப்ட் மென்பொருளை விட டிஸ்க்ரிப்டர் பயன்படுத்த சற்றே எளிமையானதாக உள்ளது.   

பாதுகாக்கப்பட வேண்டிய பிளாஷ் டிரைவினை பொருத்தி, பாஸ்வேர்டு மற்றும் என்க்ரிப்ஷன் செட் செய்தால் உங்களின் டிரைவ் பாதுகாக்கப்பட்டு விடும்.

ரோஹோஸ் டிஸ்க் என்க்ரிப்ஷன் (Rohos Disk Encryption):

அதிக மெமரி இல்லாத மென்பொருள் என்றாலும் அதிகளவு அம்சங்களை கொண்டுள்ளது. பாஸ்வேர்டு மூலம் பிளாஷ் டிரைவ்களை என்க்ரிப்ட் செய்ய சிறப்பானதாக இருக்கிறது.   

நீங்கள் பயன்படுத்தும் பிளாஷ் டிரைவ் அளவிற்கு ஏற்ப இந்த மென்பொருள் எனகிரிப்ட் செய்யப்பட வேண்டிய மெமரி அளவை நிர்ணயம் செய்து கொள்ளும். 

பிட்லாக்கர் டூ கோ (BitLocker To Go):

இது சமீபத்திய விண்டோஸ் இங்குதளங்களில் ஏற்கனவே வழங்கப்படும் மென்பொருள் ஆகும். இதனை செயல்படுத்த விண்டோஸ் கணினியின் கன்ட்ரோல் பேனல் (Control Panel) சென்று 'BitLocker Drive Encryption' ஆப்ஷனை பயன்படுத்தலாம். இதை செயல்படுத்தியதும் பிளாஷ் டிரைவ்களில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் AES-256 அல்காரிதம் மூலம் என்க்ரிப்ட் செய்யப்படும். 

Similar News