தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வேகமாக்குவது எப்படி?

Published On 2017-01-08 16:02 GMT   |   Update On 2017-01-08 16:02 GMT
ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களை வேகமாக இயங்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
புதுடெல்லி:

நம் அனைவருக்கும் நமது ஸ்மார்ட்போன்களை வேகமாக இயங்காதா என்ற எண்ணம் இருக்க தான் செய்யும். சில ஆண்டுகள் பழைய ஸ்மார்ட்போன் என்றாலும், புதிதாக வாங்கிய ஸ்மார்ட்போன் என்றாலும், போன் இன்னும் வேகமாக இயங்காதா என்ற எண்ணம் மனதில் இருக்க தான் செய்யும். 

இங்கு உங்களின் ஸ்மார்ட்போன்களை வேகமாக இயங்க வைக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.. 

டீஃபால்ட் செயலிகளை நீக்கவும்:

உங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள டீஃபால்ட் ஆப்ஸ்களை நீக்குவது மற்றும் அவற்றின் அமைப்புகளை (செட்டிங்ஸ்) மாற்றுவது ஸ்மார்ட்போன்களின் வேகத்தை அதிகரிக்கும். 

ஹோம் ஸ்கிரீனை சுத்தமாக வைக்க வேண்டும்:
 
உங்களது ஸ்மார்ட்போன் குறைந்த அளவு பிராசஸர் அல்லது ரேம் கொண்டிருந்தால், ஹோம் ஸ்கிரீன் இயக்கத்தை மாற்றியமைக்கலாம். இவ்வாறு செய்வது நல்ல பலன்களை தரும். அதாவது லைவ் வால்பேப்பர் மற்றும் விட்ஜெட் உள்ளிட்டவற்றை நீக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஸ்மார்ட்போன் வேகம் அதிகரிப்பதை உணர முடியும்.      

வேறு லான்ச்சர்களை பயன்படுத்தலாம்:

ஸ்மார்ட்போனில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள லான்ச்சர் உங்களது ஸ்மார்ட்போனின் அதிசிறந்த சிறப்பம்சங்களை மட்டும் வெளிப்படுத்தும், இதனாலேயே ஸ்மார்ட்போனின் வேகம் குறையலாம். இதை தவிர்த்து பிளே ஸ்டோர்களில் கிடைக்கும் மற்ற லான்ச்சர்களை பயன்படுத்தலாம்.  

பிரவுஸர்களை மாற்றலாம்:

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் டீஃபால்ட் வெப் பிரவுஸராக இருக்கும் கூகுள் க்ரோம் சற்றே கனமான செயலி ஆகும். இதனால் வேறு பிரவுஸர்களை பயன்படுத்தலாம். மற்ற பிரவுஸர்களை பயன்படுத்தும் போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் வேகம் அதிகரிக்கும்.  
 
செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்யலாம்:

நீங்கள் பயன்படுத்தாத மற்றும் பழைய செயலிகளை உங்களது ஸ்மார்ட்போனில் இருந்து நீக்கிவிடலாம். பிரபலமாக அறியப்படும் ஸ்னாப்சாட், ஃபேஸ்புக் உள்ளிட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்தால் ஸ்மார்ட்போனின் வேகம் 15% அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. 

ஆன்டிவைரஸ் மென்பொருள்:

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஆன்டிவைரஸ் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டால் சிறிதளவு நிம்மதி கிடைக்கும். ஆனால் இவற்றை அன்-இன்ஸ்டால் செய்தால் உங்களது ஸ்மார்ட்போனின் வேகம் அதிகரிக்கும் என்பது தெரியுமா?

அதிகாரப்பூர்வமான பிளே ஸ்டோர்களில் இருந்து செயலிகளை இன்ஸ்டால் செய்யும் போது உங்களின் ஸ்மார்ட்போன்களில் வைரஸ் அல்லது மால்வேர் நுழைய வாய்ப்புகள் மிகவும் குறைவு. 

ஆட்டோ-சின்கிங்:

ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள செயலிகளின் ஆட்டோ-சின்கிங் (Auto-Syncing) ஆப்ஷன் அடிக்கடி உங்களது இண்டர்நெட்-ஐ பயன்படுத்தும். இவ்வாறான நேரங்களில் ஸ்மார்ட்போன் அதிகப்படியான  சுமை காரணமாக ஹேங் ஆகலாம். இதனால் முடிந்த வரை நீங்களாகவே செயலிகளை சின்க் செய்யலாம்.   

ரீஸ்டார்ட்:

ஸ்மார்ட்போன்களை அடிக்கடி ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் உங்களின் ஸ்மார்ட்போன் சீராக இயங்குவதை உறுதி செய்யலாம். 

Similar News