தொழில்நுட்பம்

மத்திய அரசின் பீம் ஆப்: முக்கிய தகவல்கள்

Published On 2016-12-31 11:20 GMT   |   Update On 2016-12-31 11:20 GMT
இந்தியாவில் மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு அறிவித்த பீம் ஆப் குறித்த முக்கிய தகவல்களை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:

மத்திய அரசின் மொபைல் பேமெண்ட் ஆப் ஒருவழியாக வெளியிடப்பட்டு விட்டது. பீம் (Bharat Interface for Money - BHIM) என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தார். 

பீம் ஆப் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுக்க பணமில்லா வணிக முறையை உருவாக்க இந்த செயலி வழி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை பெற்றிருக்கும் பீம் செயலி குறித்த சில தகவல்கள் பின்வருமாறு..

* இந்த செயலி UPI (Unified Payment Interface) செயலியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இந்த செயலி உடனடி பணம் செலுத்தும் சேவையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான பரிவர்த்தனைகளை சில நொடிகளில் மேற்கொள்ள முடியும்.

* இந்த செயலியை தேசிய பணம் செலுத்தும் நிறுவனம் (National Payments Corporation of India) தயாரித்துள்ளது. இந்த செயலியின் அளவு 2.0 எம்பி ஆகும். இச்செயலி பயன்படுத்தி நாள் ஒன்றிற்கு குறைந்த பட்சம் 1 ரூபாய் முதல் 20,000 வரை பணத்தை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். இத்துடன் ஒரு பரிவர்த்தனையில் ரூ.10,000 வரை மேற்கொள்ள முடியும். 

* கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் பீம் ஆப் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. எனினும் மற்ற இங்குதளங்களிலும் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. 

* தற்சமயம் வரை பீம் செயலியில் ஒரே ஒரு வங்கி கணக்கினை மட்டுமே இணைக்க முடியும். உங்களது கணக்கை துவங்கும் போது, உங்களுக்கு தேவையான வங்கி கணக்கை தேர்வு செய்ய முடியும். ஒருவேளை மற்றொரு வங்கி கணக்கை பதிவு செய்ய வேண்டுமெனில், செயலியின் Main Menu -- Bank Accounts -- Default Account ஆப்ஷன் செல்ல வேண்டும். 

* உங்களுக்கு மொபைல் மூலம் அனுப்பப்படும் பணம் முழுவதும் உங்களின் கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்டு விடும். 

* இந்த செயலியை டவுன்லோடு செய்ததும் பயனர்கள் தங்களின் வங்கி கணக்கினை பதிவு செய்து UPI Pin ஒன்றை செட்டப் செய்து கொள்ள வேண்டும். பயனர்களின் மொபைல் நம்பரே அவர்களின் பேமெண்ட் முகவரியாக மாறிவிடும். ஒரு முறை பதிவு செய்ததும் செயலியை பயன்படுத்த துவங்கலாம். 

* UPI Pin செட்டப் செய்ய, செயலியின் Main Menu - Bank Accounts - Set UPI-PIN ஆப்ஷன் செல்ல வேண்டும். இங்கு உங்களின் டெபிட் \ ஏடிஎம் கார்டின் இறுதி 6 எண்களை பதிவு செய்ய வேண்டும். இத்துடன் எக்ஸ்பைரி தேதியையும் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் உங்களுக்கு ஒற்றை முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும், இதை பதிவு செய்ததும் UPI Pin பதிவு செய்யலாம். 

* இந்த செயலிக்கு பதிவு செய்யும் போது டெபிட் கார்டு, வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் மூலம் தகவல்களை செயலியில் பெற முடியும். இந்த செயலி மூலம் நடைபெறும் அனைத்து பரிவர்த்தனைகளும் அதிக பாதுகாப்புடன் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Similar News