தொழில்நுட்பம்

மார்ச் 16இல் இந்தியா வரும் கூல்பேட் ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்

Published On 2017-03-11 00:29 GMT   |   Update On 2017-03-11 00:29 GMT
கூல்பேட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் வெளியாவது உறுதியாகியுள்ளது. மார்ச் 16 ஆம் தேதி கூல்பேட் வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:

கூல்பேட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மார்ச் 16 ஆம் தேதி இந்தியாவில் வெளியாக இருக்கிறது. கூல்பேட் Conjr என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் முதலில் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இரு வித நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

5.0 இன்ச் IPS எச்டி 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவாட் கோர் மீடியாடெக் MT6735P சிப்செட், 3ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.



புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வை-பை, 4ஜி எல்டிஇ, போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 2500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் கைரேகை ஸ்கேனர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு கூல்பேட் வெளியிட்ட கூல்1 ஸ்மார்ட்போன் மலிவு விலையில் டூயல் கேமரா அமைப்பு கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இருந்தது. இதன் விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டது.

Similar News