தொழில்நுட்பம்

ரூ.5000 பட்ஜெட்டில் புதிய 4ஜி ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்

Published On 2017-03-03 10:44 GMT   |   Update On 2017-03-03 10:44 GMT
இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவி்ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அக்வா ஸ்டிராங் 5.1 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:

4ஜி வோல்ட்இ வசதி கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை இன்டெக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இன்டெக்ஸ் அக்வா ஸ்டிராங் விலை 5.1 இந்தியாவில் ரூ.5,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதோடு கருப்பு மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கிறது. 

சிறப்பம்சங்களை பொருத்த வரை அக்வா ஸ்டிராங் 5.1 ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் 480x854 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட FWVGA டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. 



5.0 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 2.0 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. 

2000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போனில் VAS எனப்படும் பல்வேறு கூடுதல் சேவைகளையும் புதிதாக வழங்கியுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போன் தொலைந்து போகும் பட்சத்தில் எளிதாக கண்டறிய ஸ்மார்ட் டிராக்கிங் எனும் புதிய அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News