தொழில்நுட்பம்

எல்ஜி நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

Published On 2017-02-22 22:09 GMT   |   Update On 2017-02-22 22:09 GMT
எல்ஜி நிறுவனத்தின் K சீரிஸ்-இல் புதிய ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் எல்ஜி K10 2017 என அழைக்கப்படுகிறது.
புதுடெல்லி:

எல்ஜி நிறுவனம் K சீரிஸ்-இல் புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி K10 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் எல்ஜி இணையத்தளத்தில் ரூ.15,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,990 விலையில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்தியாவில் பானிக் பட்டன் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடும் முதல் நிறுவனம் எல்ஜி தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் அனைத்து அவசர அழைப்புகளையும் 112 என்ற எண்ணிற்கு மாற்றிவிடும். 



சிறப்பம்சங்களை பொருத்த வரை எல்ஜி K10 2017 ஸ்மார்ட்போனில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 2000 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5.3 இன்ச் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எச்டி திரை வழங்கப்பட்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை ஆண்ட்ராய்டு 7.0 நொக்கட் இயங்குதளம், வை-பை, ப்ளூடூத், யுஎஸ்பி 2.0, 4ஜி எல்டிஇ மற்றும் 2800 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Similar News