தொழில்நுட்பம்

ரூ.14,000 வரை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்

Published On 2017-02-19 22:51 GMT   |   Update On 2017-02-19 22:51 GMT
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.10,000 வரை தள்ளுபடி செய்யப்பட்ட சோனி ஸ்மார்ட்போன் இம்முறை ரூ.14,000 வரை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
புதுடெல்லி:

2016 ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சோனி எக்ஸ்பீரியா X ஸ்மார்ட்போன்கள் சோனியின் புதிய ரக ஃபிளாக்‌ஷிப் போனாக அமைந்தது. சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை அவ்வப்போது மாற்றப்பட்டு புதிய சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

அறிமுகமான சில மாதங்களிலேயே சோனி எக்ஸ்பீரியா X ஸ்மார்ட்போன்கள் ரூ.10,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த விலை குறைப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன் படி இம்முறை சோனி எக்ஸ்பீரியா X ரூ.14,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.    

துவக்கத்தில் ரூ.48,990க்கு அறிமுகம் செய்யப்பட்ட சோனி எக்ஸ்பீரியா X பிளிப்கார்ட் தளத்தில் இன்று ரூ.24,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கிராஃபைட் பிளாக், லைம் கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. 

சிறப்பம்சங்களை பொருத்த வரை சோனி எக்ஸ்பீரியா X ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 3ஜிபி ரேம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 650 64-பிட் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 200 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க 23 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை அழகாக்க பல்வேறு சிறப்பம்சங்களும், அதிகப்படியான புதிய ஃபில்டர்களும் வழங்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்களை சக்தியூட்ட 2620 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

Similar News