தொழில்நுட்பம்

வளைந்த வடிவமைப்பு கொண்டுள்ள எல்ஜி G6: இனணயத்தில் கசிந்த புதிய புகைப்படம்

Published On 2017-02-19 19:41 GMT   |   Update On 2017-02-19 19:41 GMT
எல்ஜி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக தயாராகி வரும் எல்ஜி G6 புதிய புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
சியோல்:

எல்ஜி நிறுவனத்தின் புதிய G6 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் சாதனமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. அதன் படி பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்ததைத் தொடர்ந்து புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. புதிய புகைப்படத்தில் சில்வர் நிறம் கொண்டுள்ளதோடு டூயல் பிரைமரி கேமரா அமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் வளைந்த வடிவமைப்பு மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர், 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி நீட்டிக்கும் மெமரி வசதியும் 3200 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

முன்னதாக எல்ஜி வெளியிட்ட டீசரில் இந்த ஸ்மார்ட்போனில் புதிய UX 6.0 இன்டர்ஃபேஸ் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இதோடு 5.7 இன்ச் QHD+ டிஸ்ப்ளே மற்றும் புதிய மேம்படுத்தப்பட்ட மல்டி டாஸ்கிங் வசதிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் எல்ஜி G6 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் கூகுள் அசிஸ்டண்ட் சேவை கொண்ட முதல் கூகுள் அல்லாத ஸ்மர்ட்போனாக இது இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. வாட்டர் ப்ரூஃப் வசதி மற்றும் கழற்ற முடியாத பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Similar News