தொழில்நுட்பம்

மோட்டோ ஜி5: இதுவரை வெளியாகியுள்ள முழு தகவல்கள்

Published On 2017-02-18 17:58 GMT   |   Update On 2017-02-18 17:58 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி5 என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படவுள்ள அம்சங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன.
சிகாகோ:

மோட்டோ ஜி5 தான் மோட்டோரோலாவின் அடுத்த ஸ்மார்ட்போன் என்ற நிலையில் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படவுள்ள சிறப்பம்சங்கள் சார்ந்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்சமயம் வரை வெளியாகியுள்ள தகவல்களை வைத்து மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்களை பற்றி இங்கு பார்ப்போம். 

மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என தெரிகிறது. 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மெமரியை பொருத்த வரை 32ஜிபி இன்டெர்னல் மெமரியும் மெமரியை கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம். 

புகைப்படங்களை எடுக்க ஏதுவாக 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட இருக்கிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் மற்றும் 2800 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம். 

இத்துடன் சிங்கில் சிம் ஸ்லாட் மற்றும் வை-பை, ஜிபிஎஸ், ப்ளூடூத், 3ஜி மற்றும் 4ஜி உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் கைரேகை ஸ்கேனர் வசதி மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.  

இந்தியாவில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள மோட்டோ ஜி ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் புதிய மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போனிற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Similar News