தொழில்நுட்பம்

தயாராகி வரும் சியோமி ரெட்மி நோட் 4X இணையத்தில் லீக் ஆனது

Published On 2017-02-08 10:02 GMT   |   Update On 2017-02-08 10:02 GMT
சியோமி நிறுவனம் விரைவில் வெளியிட இருப்பதாக கூறப்படும் ரெட்மி நோட் 4X சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
பீஜிங்:

சியோமி நிறுவனம் விரைவில் தனது ரெட்மி நோட் 4X ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களில் ரெட்மி நோட் 4X வடிவமைப்பு ரெட்மி நோட் 4 போனை தழுவியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் சிறப்பம்சங்களில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என கூறப்பட்டது. சியோமி ரெட்மி நோட் 4X ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்து இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்கள் பின்வருமாறு..

சியோமி ரெட்மி நோட் 4X ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எச்டி டிஸ்ப்ளே, சர்வதேச சந்தையில் வெளியாகும் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 653 பிராசஸரும், சீனாவில் வெளியாகும் மாடலில் மீடியாடெக் ஹீலியோ X20 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.   

எனினும் இந்த ஸ்மார்ட்போனில் 2GB/3GB/4GB ரேம் மற்றும் 16GB/32GB/64GB இன்டெர்னல் மெமரி ஆப்ஷன்கள் வழங்கப்படும் என்றும் மெமரியை கூடுதலாக 32GB வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம். கேமராவை பொருத்த வரை 13 எம்பி பிரைமரி கேமராவும் 8 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

இத்துடன் கைரேகை ஸ்கேனர் வசதியும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளமும் 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை டூயல்-சிம் ஸ்லாட், 4ஜி எல்டிஇ, வோல்ட்இ, ப்ளூடூத் 4.0, வை-பை, GPS/A-GPS மற்றும் மைக்ரோ யுஎஸ்பி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிகிறது. மேலும் கோல்டு, சில்வர், மற்றும் கிரே நிறங்களில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகின்றது. 

Similar News