தொழில்நுட்பம்

பென்ச்மார்க்-ல் கசிந்த சாம்சங் ஸ்மார்ட்போன்: 3ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு நௌக்கட் கொண்டிருக்கும் என தகவல்

Published On 2017-02-04 20:52 GMT   |   Update On 2017-02-04 20:52 GMT
சாம்சங் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. இது குறித்து வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.
சியோல்:

சாம்சங் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது ஜிஎஃப்எக்ஸ் பென்ச் மூலம் தெரியவந்துள்ளது. SM-G615F என்ற மாடல் நம்பர் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. இத்துடன் 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர் 3 ஜிபி ரேம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.   

இத்துடன் 5.7 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் MT6757 பிராசஸர், 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, ஆட்டோஃபோகஸ், ஃபேஸ் டிடெக்ஷன், எச்டிஆர் மற்றும் எல்இடி பிளாஷ் மற்றும் 12 எம்பி செல்ஃபி கேமராவும் ஃபுல் எச்டி வீடியோக்களை பதிவு செய்யும் வசதி வழங்கப்படலாம்.  

இது தவிர சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் பே சேவையை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டு வருகிறது. இதற்கென சாம்சங் நிறுவனம் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்டு மற்றும் விசா உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனினை மார்ச் மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதோடு கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனும் தயாரிக்கப்பட்டு வருவதாக சாம்சங் ஏற்கனவே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Similar News