தொழில்நுட்பம்

பட்ஜெட் விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்: அறிமுகம் செய்தது இன்டெக்ஸ்

Published On 2017-01-25 16:36 GMT   |   Update On 2017-01-25 16:36 GMT
இன்டெக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய 4ஜி திறன் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:

இன்டெக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய கிளவுட் Q11 4ஜி எனும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ரூ.6,190 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகின்றது. 

டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் புதிய இன்டெக்ஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் 5.5 இன்ச் 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எச்டி டிஸ்ப்ளே 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737V பிராசஸர் கொண்டுள்ளது. இத்துடன் 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் புதிய VAS அம்சம் வழங்கப்பட்டுள்ளது, LFTY என அழைக்கப்படும் இந்த அம்சம் ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.   

4ஜி, வோல்ட்இ, 3ஜி, வை-பை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி, GPS/ A-GPS  மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 2800 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இதே போல் புதிய இன்டெக்ஸ் ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு அம்சம் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இன்டெக்ஸ் நிறுவனம் புதிய கிளவுட் Q11 எனும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரூ.4,699 விலையில் அறிமுகம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய கிளவுட் ஸ்டைல் ஸ்மார்ட்போன் ரூ.5,799 என்ற விலையில் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Similar News