தொழில்நுட்பம்

ஐபோன் X இந்த ஆண்டின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக இருக்குமாம்

Published On 2017-01-20 11:36 GMT   |   Update On 2017-01-20 11:36 GMT
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு வெளியிடுவதாக கூறப்படும் ஐபோன் X 2017-ன் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
பீஜிங்:

சீனாவில் ஐபோன்களை விநியோகம் செய்பவர்களிடம் இருந்து வெளியாகும் தகவல்களில் புதிய ஐபோன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐபோன் X என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் மற்ற மூன்று ஐபோன்களை விட பிரீமியம் போனாக இருக்கும் என கூறப்படுகிறது.  

சிறப்பம்சங்களை பொருத்த வரை ஐபோன் X ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் OLED பேனல் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது. இத்துடன் 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச் திரை கொண்ட ஐபோன் 7S மாடல்களும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட இருப்பதாக கூறப்படுகின்றது. 

ஐபோன் X திரை 5.8 இன்ச் அளவு இருந்தாலும் போனினை கச்சிதமாக இயக்கும் திரை பகுதி சரியான அளவில் வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. சிறிய ஐபோன்களிலும் OLED பேனல்களை வழங்கப்படலாம் என்றும் இது சாம்சங் நிறுவனம் பேனல்களை விநியோகம் செய்வதை பொருத்தே தீர்மானிக்க முடியும் என கூறப்படுகின்றது.  

புதிய வகை டிஸ்ப்ளே தொழில்நுட்பம் ஐபோன் X-ல் மட்டுமே வழங்கப்படும் என்றும் இது சமீபத்திய கேலக்ஸி போன்களில் வழங்கப்பட்டதை போன்றே 'fixed flex' திரையை பயன்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன் டச் ஐடி சென்சாரில் சினாப்டிக்-ன் ஆப்டிக்கல் சார்ந்த கைரேகை ஸ்கேனர் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

ஐபோன் X-ல் வழங்கப்படும் செல்லுலார் மோடம்களை இன்டெல் மற்றும் குவால்காம் நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகின்றது. இந்த தொழில்நுட்பத்தின்மூலம் லேசர் சென்சார், இன்ஃப்ரா ரெட் சென்சார், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News