தொழில்நுட்பம்

ரூ.3,999 விலைக்கு புதிய ஸ்மார்ட்போன் வெளியிடும் இந்திய நிறுவனம்

Published On 2017-01-19 15:09 GMT   |   Update On 2017-01-19 15:09 GMT
இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா தனது புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
புதுடெல்லி:

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா, இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. லாவா A50 மற்றும் A55 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.3,999 மற்றும் ரூ.4,399 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கிட்டதட்ட ஒரே சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. லாவா A55 ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் மற்றும் A50 ஸ்மார்ட்போனில் 512எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷமல்லோ இயங்குதளம் கொண்டுள்ளது. இவற்றில் 4.0 இன்ச் WVHA 480x800 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே மற்றும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 8ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசிதியும் வழங்கப்பட்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க 5 எம்பி பிரைமரி கேமராவும் விஜிஏ செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 3ஜி, வை-பை, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் லாவா நிறுவனம் X50+ ஸ்மார்ட்போனினை ரூ.9,199 என்ற விலையில் அறிமுகம் செய்தது. 5.5 இன்ச் 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் வழங்கப்பட்டது. 

மெமரியை பொருத்த வரை 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News