தொழில்நுட்பம்

இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 4 வெளியிடப்பட்டது

Published On 2017-01-19 09:54 GMT   |   Update On 2017-01-19 09:54 GMT
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டு வித மெமரி ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எல்சிடி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 32GB மற்றும் 64GB என இரண்டு வித மெமரிக்கள் வழங்கப்பட்டாலும், இவற்றை 128GB வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமராவும், 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அழகிய புகைப்படங்களை எடுக்க கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள நோட் 4 ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் சார்ந்த MIUI 8 யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது. 4ஜி வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்டுள்ள ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் 4100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

இந்தியாவில் சியோமி நிறுவனம் முன்னதாக வெளியிட் ரெட்மி நோட் 3 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போனினை சியோமி நிறுவனம் ஆஃப்லைன் சந்தையிலும் விற்பனை செய்யலாம் என கூறப்படுகிறது.

Similar News