தொழில்நுட்பம்

இந்த சாம்சங் போன்களுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு அப்டேட்

Published On 2016-12-31 16:03 GMT   |   Update On 2016-12-31 16:03 GMT
சாம்சங் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட சில மாடல் போன்களில் மட்டும் ஆண்ட்ராய்டு நௌக்கட் அப்டேட் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.
சீயோல்:

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S7 மற்றும் கேலக்ஸி S7 எட்ஜ் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் வழங்குவதற்கான சோதனைகள் நிறைவுற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் புதிய இயங்குதளத்தை ஜனவரி 2017இல் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. 

புதிய இயங்குதளத்தில் சாம்சங் வழங்க இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டிருக்கும் S7 மற்றும் S7 எட்ஜ் ஸ்மார்ட்ரபோன்களில் எவ்வித சிறப்பம்சங்களை எதிர்பார்க்கலாம்.   

தற்சமயம் வரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி குவிக் டாக்கில்ஸ் (Quick Toggles) அம்சம், கேமரா யூஸர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் கேமராவை எளியதாக இயக்கும் அம்சங்கள் வழங்கப்பட இருப்பது தெரிகிறது. இதில் பல்வேறு இதர கேமரா அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.  

லாக் ஸ்கிரீனில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்களின் படி குறிப்பிட்ட செயலியை இயக்க நோட்டிபிகேஷனை நேரடியாக சம்பந்தப்பட்ட செயலியின் மேல் ஸ்வைப் செய்து திறக்க முடியும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

மேலும் புதிய கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் பீஸ்ட் மோடு வழங்கப்படும் என்றும் இதன் மூலம் அல்ட்ரா பேட்டரி சேவிங் மோடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவனம் பீஸ்ட் மோடு சார்ந்த காப்புரிமை ஒன்றை சமீபத்தில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News