உழவர்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காப்பு கலை நிறைவு விழா கராத்தே சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.
- புதுவை உழவர்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான 3 மாத காலம் தற்காப்பு கலை கராத்தே பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
- மாணவிகளுக்கு தற்காப்பு களை பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார்.
புதுச்சேரி:
புதுவை உழவர்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான 3 மாத காலம் தற்காப்பு கலை கராத்தே பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
இதன் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
விழாவிற்கு புதுவை மாநில கோஜுரியோ கராத்தே சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கராத்தே சுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
பள்ளித் துணை முதல்வர் சந்திரா வாழ்த்துரை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் மாணவிகளுக்கு தற்காப்பு களை பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார்.
மேலும் மூத்த பயிற்சியாளர் சிவமதி தற்காப்பு கலையை பற்றி செயல் முறை விளக்கம் அளித்தனர்.
மேலும் தற்காப்பு கலை பயிற்சி பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும் விழாவில் பங்கேற்றனர்.