உலகம்

ஜோ பைடனுக்கு மார்பில் இருந்து தோல் புற்றுநோய் புண் அகற்றம்- மருத்துவர்கள் தகவல்

Published On 2023-03-04 06:25 GMT   |   Update On 2023-03-04 06:25 GMT
  • ஜோ பைடனுக்கு வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் வழக்கமான மருத்துவ பரிசோதனையின் போது கண்டுபிடிப்பு.
  • ஜோ பைடனுக்கு மேற் சிகிச்சை தேவையில்லை என்று மருத்துவர்கள் தகவல்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் மார்பில் இருந்து தோல் புற்றுநோய் புண் வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜோ பைடனுக்கு கடந்த ஆண்டு இறுதியில் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் வழக்கமான மருத்துவ பரிசோதனையின் போது மார்பில் புண் இருப்பது கண்டறியப்பட்டது. இது ஒரு அடித்தள செல் புற்றுநோய் என்பதும் இது பரவுவதற்கு வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டது.

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மார்பில் இருந்த தோல் புற்றுநோய் புண் வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஜோ பைடனுக்கு மேற் சிகிச்சை தேவையில்லை என்றும் அவரது உடல் நிலை தகுதியாக உள்ளதாகவும் மருத்துவர் கெவின் ஓகானர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News