உலகம்
ரஷிய ரூபிள்

லைவ் அப்டேட்ஸ்: டாலருக்கு நிகரான ரஷிய ரூபிளின் மதிப்பு உயர்வு

Published On 2022-05-19 18:56 GMT   |   Update On 2022-05-20 09:46 GMT
இந்த வருடத்தில் மட்டும் ரூபிளின் மதிப்பு 24 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
20.5.2022

15.02டாலருக்கு எதிரான ரஷிய ரூபிளின் மதிப்பு 60-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டுக்கு பிறகு ரஷிய ரூபிளின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மூலதன கட்டுபாடு மற்றும் உள்ளூர் வரி ஆகியவை ரூபிளின் மதிப்பை உயர வைத்துள்ளது. 

இந்த வருடத்தில் மட்டும் ரூபிளின் மதிப்பு 24 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு வரும் நிலையில், ரூபிளின் மதிப்பு மட்டும் தொடர் உயர்வை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10.15: உக்ரைனுக்கு எதிராக போர் செய்து வரும் ரஷியா உணவை ஆயுதமாக மாற்றியுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைனில் இருந்து உலக நாடுகளுக்கு செல்லக்கூடிய 2 கோடி டன் உணவு  தானியங்களை ரஷியா தடுத்துள்ளது. இதனால் உலக அளவில் உணவுப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.

04.00: பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபரான முகமது சஹூர், பிரிட்டனில் தொழிலதிபராக இருக்கிறார். பாகிஸ்தான் வம்சாவளி நபரான இவர் உக்ரைனில் வசித்துவந்தவர். உக்ரைன் போரில் சிக்கிக்கொண்ட பலரை பத்திரமாக வெளியேற்ற உதவியவர்.

உக்ரைன் பாடகியான கமாலியாவின் கணவர். இப்படிப் பல்வேறு விதங்களில் உக்ரைனுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கும் முகமது சஹூர், சமீபத்தில் தனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் அந்நாட்டுக்கு இரண்டு போர் விமானங்கள் வாங்கி கொடுத்துள்ளார். 

00.20: பிரிக்ஸ் கூட்டமைப்பின் வெளியுறவுத் துறை மந்திரிகள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ், உக்ரைனில் நிலவும் சூழ்நிலையை எடுத்துரைத்தார். உக்ரைனில் ரஷியா ராணுவத்தின் செயல்பாடுகளை விளக்கிக் கூறினார்.
Tags:    

Similar News