உலகம்
எலான் மஸ்க்

கருத்து சுதந்திரம் என்பது... எலான் மஸ்க் டுவீட்

Published On 2022-04-27 04:51 GMT   |   Update On 2022-04-27 04:51 GMT
ஒரு நாட்டின் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவது அந்நாட்டு மக்களின் விருப்பதிற்கு எதிராக செயல்படுவது ஆகும்.
நியூயார்க் :

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரின் கருத்து சுதந்திரம் குறித்து உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களாக கேள்வி எழுப்பி வந்தார். பின் டுவிட்டரை வாங்குவதற்கு எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்க முன் வந்தார்.

டுவிட்டர் நிறுவனமும்  4,400 கோடி அமெரிக்க டாலருக்கு எலான் மஸ்கிடம் விற்பனை செய்ய  சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டுவிட்டரில் கருத்து சுதந்திரம் குறித்து எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

நான் கருத்து சுதந்திரம் என்று சொன்னவுடன் அனைவரும் அச்சம் கொண்டுள்ளனர். 

கருத்து சுதந்திரம் என நான் குறிப்பிடுவது அந்நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட சுதந்திரத்தை தான். ஒரு நாட்டின் சட்டத்திற்கு புறம்பான கருத்துக்களை பரப்புவதற்கு என்றும் நான் எதிரானவன். 

ஒரு நாட்டின் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவது அந்நாட்டு மக்களின் விருப்பதிற்கு எதிராக செயல்படுவது ஆகும்.

இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News