உலகம்
ரஷிய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி

ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு 9 ஆண்டு சிறை

Published On 2022-03-22 14:15 GMT   |   Update On 2022-03-22 14:37 GMT
ரஷிய அதிபர் விளாடிமிர் புட்டினின் நீண்டகால எதிரியான நவால்னியை முடிந்தவரை சிறைக்குள் வைத்திருப்பதற்காகவே புதிய விசாரணை நடத்தப்படுவதாக நவால்னியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் எதிர்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி ஏற்கனவே மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். நவால்னி தற்போது மாஸ்கோவிவன் கிழக்கே உள்ள சிறையில் இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

ரஷிய அதிபர் விளாடிமிர் புட்டினின் நீண்டகால எதிரியான நவால்னியை முடிந்தவரை சிறைக்குள் வைத்திருப்பதற்காகவே புதிய விசாரணை நடத்தப்படுவதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நவால்னி மீது மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மேலும் 9 ஆண்டுகள் அதிகபட்ச சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நவால்னி 11,500 டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்.. அகிலேஷ் யாதவ், அசம் கான் ஆகியோர் எம்.பி. பதவியில் இருந்து விலகல்
Tags:    

Similar News