உலகம்
மூவர்ண கொடி, இந்திய மாணவர்கள்

பாகிஸ்தான் மாணவர்களை காப்பாற்றும் இந்திய மூவர்ண கொடி - இந்திய மாணவர்கள் தகவல்

Published On 2022-03-02 22:39 GMT   |   Update On 2022-03-02 22:39 GMT
உக்ரைனில் உள்ள சோதனைச் சாவடிகளை மாணவர்கள் பாதுகாப்பாக கடக்க மூவர்ண கொடி உதவி வருகிறது
புகாரெஸ்ட்:

உக்ரைனில் சிக்கியுள்ள பல்வேறு நாட்டு மாணவர்கள் எல்லை வழியே அண்டை நாடுகளுக்கு சென்று அங்கிருந்து தங்களது சொந்த நாட்டிற்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தெற்கு உக்ரைனில் உள்ள ஒடேசா நகரில் இருந்து ருமேனியாவின் புகாரெஸ்ட் நகருக்கு வந்த இந்திய மாணவர்கள் சிலர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியர்களாக இருப்பதாலும், இந்தியக் கொடியை ஏந்தியிருப்பதாலும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று உக்ரைனில் கூறப்பட்டது.

நான் இந்திய மூவர்ண கொடியை தயாரிப்பதற்காகச் சந்தைக்கு சென்று திரைச் சீலையும் , ஸ்ப்ரே பெயிண்ட்களை வாங்கினேன்.திரைச்சீலையை வெட்டி அதில் ஸ்ப்ரே பெயிண்ட் அடித்து இந்திய மூவர்ணக்கொடியை உருவாக்கினேன். 

சில பாகிஸ்தான் மற்றும் துருக்கி மாணவர்கள் கூட இந்திய மூவர்ண கொடியைப் பயன்படுத்தி சோதனைச் சாவடிகளை கடந்து சென்றனர். பாகிஸ்தான், துருக்கி மாணவர்களுக்கு இந்திய கொடி பெரும் உதவியாக இருந்தது. 

ஒடேசாவிலிருந்து பேருந்தை முன்பதிவு செய்து மொலோடோவா எல்லைக்கு வந்தோம். மால்டோவன் குடிமக்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் எங்களுக்கு இலவச தங்குமிடத்தையும், ருமேனியாவிற்கு செல்ல டாக்சி மற்றும் பேருந்துகளை ஏற்பாடு செய்தனர். 

இந்திய தூதரகம் எடுத்த நடவடிக்கைகளால் மோலோடோவாவில் அதிக பிரச்சனையை சந்திக்கவில்லை.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News