ஆப்கானிஸ்தானில் நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இரட்டை நிலநடுக்கம் - 22 பேர் பலி
பதிவு: ஜனவரி 18, 2022 01:28 IST
நிலநடுக்கம்
காபூல்:
மேற்கு ஆப்கானிஸ்தானில் பிற்பகல் 2 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், மாலை 4 மணிக்கு 4.9 ரிக்டர் அளவுகோலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த இரு நிலநடுக்கங்களில் குடியிருப்பு வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்து உள்ளனர்.
இதையும் படியுங்கள்...இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம் - டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
Related Tags :