உலகம்
கவுதம் ராகவன்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தலைமை பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்

Published On 2021-12-11 05:02 GMT   |   Update On 2021-12-11 05:02 GMT
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கவுதம் ராகவன் முன்னாள் அமெரிக்க அதிபர் ஓபாமா நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்பு வழங்கி வருகிறார். இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கவுதம் ராகவனை நியமித்து அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.

கவுதம் ராகவன் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் சியாட்டில் வளர்ந்தவர். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர் முன்னாள் அமெரிக்க அதிபர் ஓபாமா நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

ஜோ பைடன் அதிபராக பதவி ஏற்ற பின் அவரின் துணை உதவியாளராகவும் வெள்ளை மாளிகையின் அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக துணை இயக்குனராகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News