செய்திகள்
ஊசி சிரெஞ்சு

அடுத்த ஆண்டு ஊசி தட்டுப்பாடு ஏற்படும் - உலக சுகாதார நிறுவனம் தகவல்

Published On 2021-11-15 07:06 GMT   |   Update On 2021-11-15 07:40 GMT
கடந்த ஓராண்டில் மட்டும் கொரோனா தடுப்பூசிக்காக 725 கோடி ஊசி சிரெஞ்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே இருப்பு இருந்த சிரெஞ்சுகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுவிட்டன.

ஜெனிவா:

உலகம் முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதனால் ஊசி சிரெஞ்சு அதிகமாக தேவைப்படுகிறது.

இவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகப்படுத்தின. ஆனாலும் கூட போதுமான ஊசி சிரெஞ்சுகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே அடுத்த ஆண்டு ஊசி சிரெஞ்சுக்கு உலகம் முழுவதும் கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆலோசகர் லிசா ஹெட்மென் இது சம்பந்தமாக கூறியதாவது:-


உலகம் முழுவதும் உள்ள ஊசி சிரெஞ்சு தயாரிக்கும் நிறுவனங்களால் ஆண்டுக்கு 600 கோடி சிரெஞ்சுகளையே உற்பத்தி செய்ய முடியும்.

கடந்த ஓராண்டில் மட்டும் கொரோனா தடுப்பூசிக்காக 725 கோடி ஊசி சிரெஞ்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே இருப்பு இருந்த சிரெஞ்சுகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுவிட்டன.

அடுத்ததாக 2-வது தவணை ஊசி போடுவதற்காக 700 கோடி ஊசி சிரெஞ்சுகள் தேவைப்படுகிறது. ஆனால் இவற்றை உற்பத்தி செய்வது கடினம். எனவே அடுத்த ஆண்டு 100 கோடி முதல் 200 கோடி ஊசி சிரெஞ்சுகள் வரை தட்டுப்பாடு ஏற்படலாம்.

இது ஒரு முக்கிய பிரச்சினை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்...இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 10 ஆயிரமாக சரிவு

Tags:    

Similar News