செய்திகள்
பிரான்ஸ் அதிபரை சந்தித்த பிரதமர் மோடி

இந்தியாவுக்கு வரவேண்டும் - பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி

Published On 2021-10-30 18:00 GMT   |   Update On 2021-10-30 18:00 GMT
இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி ஜி-20 மாநாட்டின் போது பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தார்.
ரோம்:

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறுகிறது.

இத்தாலி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டின் இடையே, ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானாம், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், துருக்கி அதிபர் எர்டோகன் உள்பட பல தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். 

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர். அப்போது அதிபர் மேக்ரானை இந்தியா வரவேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அதிபரை சந்தித்தது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், எனது நண்பரான அதிபர் இம்மானுவல் மேக்ரானை ரோம் நகரில் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினோம் என பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News