செய்திகள்
பில் கிளிண்டன்

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

Published On 2021-10-17 18:27 GMT   |   Update On 2021-10-17 18:27 GMT
பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே, அவரது மனைவி ஹிலாரி உடன் இருந்து அவரை கவனித்து வந்தார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு கொரோனா அல்லாத மற்றொரு வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவா் கலிபோா்னியாவில் உள்ள இா்வின் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

75 வயதான பில் கிளிண்டன் உடல் நலம் தேறி வருவதாகவும் அவா் மன உறுதியுடன் இருப்பதாகவும் அவரது செய்தித் தொடா்பாளா் ஏஞ்சல் உரேனா தெரிவித்திருந்தார். 

இதற்கிடையே அதிபர் ஜோ பைடன் நேற்று பில் கிளிண்டனுடன் போனில் பேசி நலம் விசாரித்தார். அத்துடன் மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

இதுதொடர்பாக, அதிபர் ஜோ பைடன் கூறுகையில், பில் கிளிண்டன் நலமாக உள்ளார். விரைவில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் என்னிடம் தெரிவித்தது என்றார்.

இந்நிலையில், இன்று அமெரிக்க நேரப்படி காலை 8 மணிக்கு, பில் கிளிண்டன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவருடன் அவரது மனைவி ஹிலாரி கிளிண்டன் உடன் இருந்தார். 

பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே, அவரது மனைவி ஹிலாரி உடன் இருந்து அவரை கவனித்து வந்தார். தற்போது பில் கிளிண்டன் பூரண நலத்துடன் இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைகள் அவருக்கு வழங்கப்படும் என அவரது செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News