செய்திகள்
ஜக்மீத் சிங்

கனடா பாராளுமன்றத் தேர்தலில் 17 இந்தியர்கள் வெற்றி

Published On 2021-09-22 09:46 GMT   |   Update On 2021-09-22 09:46 GMT
முந்தைய அரசில் அமைச்சர்களாக இருந்த இந்திய வம்சாவளியினரான ஹர்ஜித் சஜ்ஜன், அனிதா ஆனந்த், பர்திஷ் சாகர் ஆகியோர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.
டொரன்டோ:

கனடா பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது.  அக்கட்சி ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை பெறாவிட்டாலும், கூட்டணி ஆட்சியமைக்கும் வாய்ப்பு உள்ளது. ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர். முந்தைய அரசில் அமைச்சர்களாக இருந்த இந்திய வம்சாவளியினரான பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன், அனிதா ஆனந்த், பர்திஷ் சாகர் ஆகியோர் இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். நியூ டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்த ஜக்மீத் சிங், பர்னபி தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
Tags:    

Similar News