செய்திகள்
உலக வங்கி

ஆப்கானிஸ்தானுக்கு அளித்து வந்த உதவிகள் நிறுத்தம் - உலக வங்கி அறிவிப்பு

Published On 2021-08-25 00:53 GMT   |   Update On 2021-08-25 00:53 GMT
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன்:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானை மீண்டும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். புதிய அரசை அமைக்க தலிபான்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்த நாட்டு மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து தப்பி வருகின்றனர்.

இதனால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றமும் குழப்பமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானின் இந்த நிலைமைக்கு அமெரிக்காவே காரணம் என உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ஆனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெற்றதற்காக வருந்தவில்லை. தனது முடிவில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவிகள் நிறுத்தப்படுகிறது என உலக வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், தலிபான்களின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் நிலை கவலை அளிப்பதாகவும் கூறியுள்ளது.
Tags:    

Similar News