செய்திகள்
அருண் வெங்கட்ராமன்

அமெரிக்காவில் முக்கிய பதவியில் இந்தியர் - ஜோ பைடன் பரிந்துரை

Published On 2021-05-27 19:44 GMT   |   Update On 2021-05-27 19:44 GMT
இந்திய வம்சாவளியைச்சேர்ந்த அருண் வெங்கட்ராமன் அமெரிக்க வர்த்தக மந்திரிக்கு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு பொருளாதார விவகார துறையில் ஆலோசகராக உள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் வெளிநாட்டு வர்த்தக சேவையின் தலைமை இயக்குனர் மற்றும் வர்த்தகத்துறையில் உலகளாவிய சந்தைகளுக்கான உதவி செயலாளர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச்சேர்ந்த அருண் வெங்கட்ராமனை நியமிக்க ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.

இவர் சர்வதேச வர்த்தக பிரச்சினைகள் தொடர்பாக நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க அரசுக்கு ஆலோசனைகளை 20 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கிய அனுபவசாலி ஆவார்.



தற்போது இவர் அமெரிக்க வர்த்தக மந்திரிக்கு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு பொருளாதார விவகார துறையில் ஆலோசகராக உள்ளார்.

ஜோ பைடன்- கமலா ஹாரிஸ் நிர்வாகத்தில் சேருவதற்கு முன்பாக இவர் விசா என்ற அமைப்பில் மூத்த இயக்குனராக இருந்தார்.

ஆரம்பத்தில் இவர் சர்வதேச வர்த்தகத்துக்கான அமெரிக்க கோர்ட்டில் நீதிபதி ஜேனி ஏ ரெஸ்டானியின் சட்ட எழுத்தாளராக பணியாற்றியவர் ஆவார். அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்திலும் பணியாற்றி உள்ளார்.
Tags:    

Similar News