செய்திகள்
குண்டு வெடிப்பு (கோப்பு படம்)

பள்ளிக்கூடம் அருகே பயங்கர குண்டுவெடிப்பு -25 பேர் பலி

Published On 2021-05-08 16:05 GMT   |   Update On 2021-05-08 16:05 GMT
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் செப்டம்பர் 11ம் தேதி வெளியேற திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட பிறகு காபூல் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காபூல்:

ஆப்கானிஸ்தான்  தலைநகர் காபூலில் உள்ள பள்ளிக்கூடம் அருகே இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் தூக்கி வீசப்பட்டனர். அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த குண்டுவெடிப்பில் 25 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் உள்துறை அமைச்சகம் கூறி உள்ளது. மாணவர்கள் உள்ளிட்ட 52 பேர் காயமடைந்ததாக உள்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். குண்டு வெடிப்புக்கான காரணம் அல்லது யாரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது? என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை. 

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் அனைத்தையும் செப்டம்பர் 11ம் தேதிக்குள் வெளியேற்ற திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட பிறகு காபூல் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலிபான்கள் நாடு முழுவதும் தாக்குதல்களை அதிகரித்து வருவதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய குண்டுவெடிப்புக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Tags:    

Similar News